பருவப் பெயர்ச்சி மழை மற்றும் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் போது அதனை எதிர்கொண்டு சமாளிக்கும் நிலையினை தயார் செய்யும் முகமாக தெளிவுபடுத்தல்களை நாவிதன் வெளிப் பிரதேச செயலகம் மேற்கொண்டு வருகின்றது. அதன் ஓர் அங்கமாக அலுவலக உத்தியோகத்தர்கள் , அனர்த்த முகாமைத்துவ குழு உறுப்பினர்கள் . கிராம பொதுமக்கள் ஆகியோர்களுக்கான விளிப்புணர்வு இன்று பிரதேச செயலக கலாசார மத்திய நிலையத்தில் இடம் பெற்றது
அனர்த்த முகாமைத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தர் P. செல்வகுமார் தலமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் S.ரங்கநாதன், கிராம சேவகர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் T.தேவ ரஞ்ஞன். பொதுச் சுகாதார பரிசோதகர் திரு. ரசீ ன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது பிரதேச செயலாளர் உரையாற்றுகையில் அனைத்து நிலமைகளையும் முகம் கொள்ளக் கூடிய வகையில் எப்போதும் எமது உத்தியோகத்தர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.




0 Comments