நாவிதன்வெளி பிரதேச தானியப் பயிர்கள் அறுவடை விழா

 (எம்.எஸ்.எம்.சிஹாப்)
தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தின் கீழ் நாவிதன்வெளி பிரதேச செயலக வளாகத்தில் செய்கை பண்ணப்பட்ட தானியப் பயிர்கள் அறுவடை விழா நேற்று இடம்பெற்றது.

நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் பிரதமஅதிதியாக கலந்து கொண்டு அறுவடையை ஆரம்பித்து வைத்தார்.

நஞ்சற்ற உணவு உற்பத்தியை நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் ஊக்குவிக்கும் நோக்குடன் பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலகஉத்தியோகத்தர்களால் இத்தானியப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ரி.மோகனகுமார்கணக்காளர் வை.ஹபீபுள்ளாஹ்பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என மேலும் பலர் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments