சவளக்கடை பொலிஸ் பிரிவிலுள்ள ஆட்டோ சாரதிகளுக்கு முதலுதவி பயிற்சி


(எம்.எம்.ஜபீர்)
சவளக்கடை பொலிஸ் நிலையப் போக்குவரத்து பிரிவும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் அம்பாரை கிளையும் இணைந்து பொலிஸ் பிரிவிலுள்ள முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு  ஏற்பாடு செய்த முதலுதவி பயிற்சி செயலமர்வு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.எம்.நஜீம் தலைமையில் பொலிஸ் நிலைய மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது முதலுதவி சிகிச்சையின் முக்கியத்துவம் மற்றும்  சாரதிகளுக்கு வீதி விபத்துக்களில் முதலுதவி சிகிச்சை அளிப்பது தொடர்பாக  இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் அம்பாரை கிளையின் முதலுதவி போதனா ஆசிரியை  கே.ரீ.றோகீனியால் சாரதிகளுக்கு பயிற்ச்சியளிக்கப்பட்டது.

இதில் சவளக்கடை பொலிஸ் நிலையப் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ரீ.மேனன், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் அம்பாரை கிளை உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், சாரதிகள் என பலர் கலந்துகொண்டனர்.




Post a Comment

0 Comments