(எம்.எம்.ஜபீர்)
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க சம்மாந்துறை அமீர் அலி சிறுவர் பூங்கா நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் அவர்களினால் 5.45 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நவீன விளையாட்டு உபகரணங்கள் பொருத்தப்பட்டு மக்களிடம் இன்று வெள்ளிக்கிழமை கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இனைத் தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூர், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளர் மன்சூர் ஏ.காதீர், சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், டி.எஸ்.வீ. நிறுவனத்தின் விற்பனையாளர் சரீத் திலங்கரத்தின,உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
0 Comments