அரசாங்கத்தினால் வரவு செலவுத் திட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சுரக் ஷா காப்புறுதி திட்டம் நாவிதன்வெளி கோட்டக்கல்வி அலுவலகத்தின் கீழுள்ள மத்தியமுகாம் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்து வைக்கபப்ட்டது.
மத்தியமுகாம் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை அதிபர் வை.வீ.எம்.சுல்தான் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாவிதன்வெளி பிரதேச அமைப்பாளர் ஏ.கே.அப்துல் சமட் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கான காப்புறுதி சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர்களுக்கு இது தொடர்பாக விழிப்பூட்டலும் இடம்பெற்றது.
0 Comments