ஆலையடிவேம்பு சிவனருள் தொழிற் பயிற்சி நிலையத்தின் NVQ பயிற்சி நெறி ஆரம்ப விழா

அம்பாரை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட இடைவிலகிய, கல்வியை தொடரமுடியாமல் வேலைக்காக காத்திருக்கும் பெண்களை கொண்டு அவர்களின் வருவாயை ஈட்டக்கூடிய செயற்திட்டத்தை wusc நிறுவனத்துடன் இணைந்து ரத்ணம் பவுண்டேசனின் நிதி அனுசரணையுடன் சிவனருள் பவுண்டேசன் 2017-12-04 ம் திகதி மிகவும் சிறப்பான முறையில் கம்பியூட்டர் கிராபிஸ் டிசைனின் பயிற்சி நெறி ஆரம்ப விழா சிவனருள் மண்டபத்தில் நடாத்தப்பட்டது. இதில் 75 பேர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இதில் பிரதம விருந்தினராக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் திரு.வேதனாயகம் ஜெகதீஷன் அர்களும், உதவிப் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் அவர்களும், சிரேஸ்ட நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் திருகோணமலையைச் சேர்ந்த திரு. சரவணபவன் அவர்களும், சிரேஸ்ட நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் அம்பாரை மாவட்டத்தைச்சேர்ந்த திரு.ஜேசு சகாயம் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திரு.வடிவேல் பரமசிங்கம் SWOAD முகாமையாளர் அவர்களும், காலாநிதி அன்வர் முஸ்தப்பா CIMS Campus முகாமையாளர் அவர்களும், பயிற்சி நிலையத்தின் போதனசிரியர் ஜெ.எம்.பாஸித் அவர்களும், அதிபர் திகோஃவிநாயகர் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த திரு.பரமன் கிருஸ்ணபிள்ளை அவர்களும் கலந்து கொண்டனர். அவர்களின் உரையில் பெண்களின் தொழில் முயற்சியின் முக்கியத்துவத்தையும் அதன் பயன்பாட்டையும் மிகவும் தெளிவாக விளக்கினார்கள். தற்காலப் பெண்கள் அதிகளவு வேலைவாய்ப்புக்களை பெற்றுக் கொள்ளக் கூடியதாகவும், குடும்ப வருமானத்தை அதிகரிப்பதாகவும் அத்துடன் மேலும் கம்பியூட்டர் கிராபிஸ் டிசைனின் பயிற்சி நெறி மூலம் மேலும் புதிய கணனி தொழில் நுட்பங்களை அறிந்து கொள்ள முடியுமென்று வலியுத்தினார்கள். நவீன கால தொழில்நுட்ப தொடர்பாடல்களுக்கு ஈடுகொடுக்க கூடியதாக மாணவர்களை இப்பயிற்சி மூலம் இணைந்துள்ளதை எல்லாப்பேச்சாளர்களும் தமது உரையில் குறிப்பிட்டனர். இப்பயிற்சயில் தாய் தந்தை இளந்த பிள்ளைகள், மாற்றுத்திறன் உள்ள பிள்ளைகள், வறிய குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள் என இணைக்கப்பட்டுள்ளனர்.





















Post a Comment

0 Comments