ஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரம் ஏற்பாட்டில் நாடு தழுவிய ரீதியில் பாடாசலைகளின் உயா்தரம் க.பொ.சா. தரத்தின் தோ்ந்தெடுத்த 150 மாணவ மாணவிகளுக்கான 58வது ஊடக செயலமா்வு நேற்று(24) சிலாபம் கல்வி வலயத்தில் உள்ள மாதம்பை அல் மிஸ்பா முஸ்லீம் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
21 நுாற்றாண்டில் ஊடகம்”எனும் தொனிப்பொருளிலான இந்தச் செயலமா்வு மீடியா போரத்தின் தலைவா் என்.எம். அமீன் தலைமையில் நடைபெற்றது. இந்த செயலாமா்வில் நஸ்ரியா தேசிய பாடசாலையில் உயா்தர மாணவ மாணவிகளுகம் கலந்து கொண்டனா். கல்விக் கல்லுாாி முன்னாள் உப பீடாதிபதி கலைவாதிக் கலீல், விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியா் எம்.பி.எம். பைருஸ், தினகரன் பத்திரிகையின் ஆலோசகா் எம்.ஏ.எம். நிலாம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் தயாரிப்பாளா் எம். ஹாரீஸ், சமுக வலையத்தளங்கள் பற்றி ஊடகவியலாளா் பிரவுஸ் மொஹமட் ஆகியோர் வளவாளா்ளாக கலந்து கொண்டனா்.
மாலை அமா்வில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வுக்கு சிறப்பு அதிதியாக சிலாபம் நகர சபை உறுப்பிணா் சட்டத்தரணி ஏ.டப்பிள்யு சாதிக்குள் அமீன், சிலாபம் கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளா் திருமதி அனிதா கமலேந்திரன், கல்லுாாியின் பிரதி அதிபா் நசீம் மௌலானா மற்றும் உவைஸ் கஸ்சாலி ஆகியோறும் கலந்து சிறப்பித்தனா்.






0 Comments