அம்பாறை நகரில் பதற்றம் (படங்கள் இணைப்பு)

சிங்கள காடையர்களினால் அம்பாரை நகரில் இன்று நள்ளிரவு பள்ளிவாசல் உடைப்பு சில வர்த்தக நிலையங்களுக்கும்,வாகனங்களுக்கும் சேதமாக்கி உடைக்கப்பட்டுள்ளதாகவும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் 

கிடைத்துள்ளது இதுவரை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மூன்று முஸ்லிம் உணவகமும், காத்தான்குடி நபருக்கு சொந்தமான பேக் கடை ஒன்றும், அம்பாறை ஜும்ஆ பள்ளிவாயல் ஒன்றும் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.
அங்கு நிலவரங்களை எனது சகோதரர் சற்றுநேரத்துக்கு முன் சென்று பார்வையிட்டார். பொலிஸார் பாதுகாப்பைபலப்படுத்தியுள்ளதாகவும் நிலமை கட்டுட்பாட்டுக்குள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
அம்பாறை ஜும்ஆ பள்ளிவாயல் சுற்று மதில்கள் உடைக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளிவாயல் சேதப்பட்டுத்தப்பட்டுள்ளதாகவும், வாகனம்கள் சேதப்பட்டுத்தப்பட்டுளதாகவும் தெரிவித்தார். பள்ளிவாயலுக்கு உள்ளே செல்ல அனுமதிக்காததால் பள்ளிவாயல் தொடர்பான சரியான சேத விபரங்களை கண்டறிய முடியாமல் உள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போது பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர்எ ம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோர்கள் சேதமடைந்த பிரதேசங்களின் கன்டரிய சென்றுள்ளனர்.














Post a Comment

0 Comments