(எம்.எம்.ஜபீர்)
நாவிதன்வெளி பிரதேச சபைக்கு சாளம்பைக்கேணி வடக்கு வட்டாரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டு பெரும்பான்மை வாக்குகள் பெற்று வெற்றிபெற்ற எம்.வீ.நவாஸ் அவர்களின் வெற்றிப்பேரணி இன்று சாளம்பைக்கேணி வடக்கு வட்டாரத்தில் இடம்பெற்றது.
இதன்போது எம்.வீ.நவாஸ் அவர்களுக்கு மகளிர் சங்கள் மற்றும் மக்களால் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டதோடு, இளைஞர்களின் வாகாண பவனியுடன் வெற்றி ஊர்வலமும் இடம்பெற்றது,
ஆலையடிசந்தியிலிருந்து 5ஆம் கொளனி ஊடாக வீரத்திடல் அல்-ஹிதாயா பாடசாலை வீதி வழியாக 6ஆம் கொளனி ஊடாக சவளக்கடை பொலிஸ் முன்பாக சென்று சாளம்பைக்கேணி -05 அர்-ரஹ்மான் வீதி வழியாக சென்று ஆலையடிசந்தியில் பேரணி நிறைவுபெற்றது.
0 Comments