மத்தியமுகாம் றாணமடு இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் பாண்டியன் (மஞ்சள்) இல்லம் 344 புள்ளிகளைப் பெற்று இவ்வருடத்திற்கான சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
இதேவேளை சோளன் (நீலம்) இல்லம் 300 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும், சேரன் (பச்சை) இல்லம் 285 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.
மத்தியமுகாம் றாணமடு இந்துக் கல்லூரியின் அதிபர் கே.தியாகராஜா தலைமையில் நேற்று (27) பாடசாலை மைதானத்தில் இடம்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம் பிரதம அதிதியாகவும், சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் (நிர்வாகம்) ஏ.எஸ்.அஹமட் கியாஸ், நாவிதன்வெளி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ரி.மோகனகுமார் ஆகியோர்கள் கௌரவ அதிதிகளாகவும், சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் (திட்டமிடல்) எம்.எச்.எம்.ஜாபீர், நாவிதன்வெளி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து, ஓய்வு பெற்ற முன்னாள் நாவிதன்வெளி கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.வினாயகம்பிள்ளை ஆகியோர்கள் விஷேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
மத்தியமுகாம் றாணமடு இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் அணி நடைக் கண்காட்சி, உடற் பயிற்சி கண்காட்சி என்பன அனைவரையும் கவர்ந்த நிகழ்வாக அமையப் பெற்றிருந்தன. வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் இல்லங்களிற்கான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள், வெற்றிக் கேடயங்கள் என்பன கலந்து கொண்ட அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.




0 Comments