(எம்.எம்.ஜபீர்)
நாவிதன்வெளி கோட்டக்கல்வி அலுவலகத்தின் கீளுள்ள மத்தியமுகாம் சாளம்பைக்கேணி அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தில் விளையாட்டுத்துறை அமைச்சினால் கிறிக்கட் பாடசாலைகள் உருவாக்கும் திட்டத்தில் கீழ் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும், விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் (26)இன்று பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மத்தியமுகாம் சாளம்பைக்கேணி அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலய அதிபர் எஸ்.எம்.எம்.யூசுப் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இதில் நாவிதன்வெளி பிரதேச ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளர் ஏ.சீ.நிஸார், பிரதி அதிபர் எஸ்.அமீருல்ஹக், நாவிதன்வெளி பிரதேச சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ். சார்பாக தெரிவான எம்.வீ.நபாஸ், பிரதி அமைச்சரின் இணைப்பு செயலாளர் நௌபர் ஏ.வாபா, பிரதி அமைச்சரின் ஊடக இணைப்பாளர் றியாத் ஏ.மஜீட் உள்ளிட்ட சமூகசேவகன் ஏ.எல்.இம்தியாஸ், ஆசிரியர்கள், மாணவர்கள் என மேலும் பலர் கலந்து கொண்டனர்.
0 Comments