இன்று நடிகை ஸ்ரீ தேவியின் இறுதி கிரியைகள்

நடிகை ஸ்ரீ தேவியின் இறுதி கிரியைகள் இன்று நடைபெறவுள்ளன. இந்நிலையில் அவரது பூதவுடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 டுபாயில் அண்மையில் இடம்பெற்ற திருமண வைபவத்தில் கலந்து கொள்வதற்காக சென்ற ஸ்ரீ தேவி அங்கு திடீரென உயிரிழந்தார். அவரது உடல் நேற்று இரவு இந்தியாவின் பிரபல தொழில் அதிபர் அணில் அம்பானியின் விசேட விமானம் மூலம் மும்பைக்கு எடுத்து வரப்பட்டது. தற்போது அந்தேரி பகுதியில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 
அரசியல் தலைவர்கள், ஹிந்தி திரையுலக பிரபலங்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று பிற்பகல் இறுதி ஊர்வலம் இடம்பெறுவதுடன் 3.30 மணிக்கு வில்லி பார்ளி என்ற மைதானத்தில் அவரது பூதவுடல் தகனம் செய்யப்படவுள்ளது.

Post a Comment

0 Comments