பஸ் விபத்து:13 பேர் வைத்தியசாலையில்


ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் ஒன்று மற்றுமொரு தனியார் பயணிகள் பஸ் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில், 13 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை வலஸ்முல்ல – ஊருபொக்க வராபிட்டிய சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்தவர்கள் கிராமிய வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பஸ்ஸில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறே இந்த விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments