கொடதெனியாவ – படல்கம பகுதியில், இன்று (18) முச்சக்கரவண்டி ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில், ஒருவர் பலியாகியுள்ளார்.
குறித்த வாகனத்தில் பயணித்த, 58 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் உடன் பயணித்த மூவரும் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டி ஓட்டுநருக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கத்தினாலேயே, விபத்து நேர்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 Comments