(எம்.எஸ்.எம்.சிஹாப்)
மத்தியமுகாம் 11ஆம் கிராமம் கிறீன்லைற் விளையாட்டுக் கழகத்தின் 42ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டும், சித்திரைப் புத்தாண்டை சிறப்பிக்கும் வகையிலும் ஏற்பாடுசெய்யப்பட்ட மின்னொளியிலான மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியை மத்தியமுகாம் - 06 பொது விளையாட்டு மைதானத்தில் நடாத்தவுள்ளதாக கழகத்தின்செயலாளர் என்.அனோஜன் தெரிவித்தார்.
அணிக்கு 04 பேர்களைக் கொண்டு விலகல் முறையில் மின்னொளியிலான இக்கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி எதிர்வரும் ஏப்பிரல் 21ஆம் திகதி சனிக்கிழமை இரவு 7.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் அணிகள் எதிர்வரும் 21ஆம் திகதி பிற்பகல் 4.00 மணிக்கு முன்னர் பதிவு செய்து கொள்ளுமாறும், பதிவு செய்த கழகங்கள் வரவைஉறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.
எமது இளைஞர்களிடையே அருகிவரும் கரப்பந்தாட்ட விளையாட்டை கைவிடக்கூடாது எனும் நோக்குடன் வருடாந்தம் மின்னொளியிலான கரப்பந்தாட்ட போட்டியைகிறீன்லைட் விளையாட்டுக் கழகம் முன்னெடுத்து வருகின்றது.
இக்கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள சுவிக்குமார் 0750967994, சிவகுமார் 0757354599, பகிகரன் 0770562996, ரமேஸ் 0757780802 ஆகியோர்களின் தொலைபேசி இலக்கங்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 Comments