சாளம்பைக்கேணி-03 12ஆம் கிராம சமூக இளைஞர் விளையாட்டு கழகத்தின் 3ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்த கிரக்கெட் சுற்றுப் போட்டியில் சாளம்பைக்கேணி-03 எமரல்ட் விளையாட்டுக்கழகம் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.
இச்சுற்றுப்போட்டி 5ஒவர் மட்டுப்படுத்தப்பட்ட அணிக்கு 7வீரர்கள் கொண்ட இறுதி சுற்றுக்கு மாவடிப்பள்ளி விளையாட்டுக் கழகமும் சாளம்பைக்கேணி-03 எமரல்ட் விளையாட்டுக் கழகமும் தெரிவானது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சாளம்பைக்கேணி-03 எமரல்ட் விளையாட்டு கழகம் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
மாவடிப்பள்ளி விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்படுத்தாடி 5 ஒவர் நிறைவில் 4 விக்கெட்களை இழந்து 45 ஒட்டங்களை பெற்றது. பதிலுக்குத் துடுப்படுத்தாடிய எமரல்ட் விளையாட்டுக் கழகம் 4.1ஒவர் நிறைவில் 03 விக்கெட்களை இழந்து வெற்றியை தனதாக்கிக்கொண்டது.
இந்நிகழ்வு சமூக இளைஞர் விளையாட்டு கழகத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.றியாழ் தலைமையில் 5ஆம் கிராம அமீர் அலி பொது மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் Fork அமைப்பின் தலைவர் எம்.ஐ.எம்.சர்ஜூன் பிரதான அனுசரணை வழங்கியதுடன் இணை அனுசரணையை சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் எம்.ஐ.அஜ்மீர், நாவிதன்வெளி பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட வேட்பாளரும் அறிவிப்பாளருமான ஏ.எல்.எம்.இம்தியாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.











0 Comments