12ஆம் கிராம சமூக இளைஞர் விளையாட்டு கழகத்தின் கிரிக்கெட் சுற்றுப் போட்டி

(எம்.எம்.ஜபீர்)
சாளம்பைக்கேணி-03 12ஆம் கிராம சமூக இளைஞர் விளையாட்டு கழகத்தின் 3ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்த  மாபெரும் கிரக்கெட் சுற்றுப் போட்டி சமூக இளைஞர் விளையாட்டு கழகத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.றியாழ் தலைமையில் சவளக்கடை 5ஆம் கிராம அமீர் அலி பொது மைதானத்தில் நடைபெறவுள்ளதாக கழகத்தின் செயலாளர் ஏ.எம்.அஸ்லம் தெரிவித்தார்.

அணிக்கு 07 பேர்களைக் கொண்ட 05 ஒவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இக்கிரிக்கெட் சுற்றுப் போட்டி எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 22, 28, 29ஆம் ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது.

இக்கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் முதலாம் இடத்தைபெறும் அணிக்கு பெறுமதியான வெற்றிக்கிண்ணமும், வீரர்களுக்கு பதக்கமும், இரண்டாம் இடத்தை பெறும் அணிக்கு கிண்ணமும் வீரர்களுக்கு பதக்கமும் வழங்கப்படவுள்ளது.

இக்கிரிக்கெட் சுற்றுப்போட்டி தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள எம்.எஸ்.எம்.றியாழ்-0770502989, எம்.ஐ.அஜ்மீர்- 0773745543 ஆகியோர்களின் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும்மெனவும் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments