15ஆம் கொளனி சுதந்திரன் வி. க சித்திரை புத்தாண்டு கலை கலாச்சார நிகழ்வு

(எம்.எம்.ஜபீர்)
நாவிதன்வெளி 15ஆம் கொளனி சுதந்திரன் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு கலை கலாச்சார விளையாட்டு நிகழ்வும் கௌரவிப்பும் நேற்று சுதந்திரன் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றன.

இதன்போது வழுக்குமரம் ஏறுதல், தலையணைச் சமர், கயிறு இழுத்தல், முட்டி உடைத்தல், யானைக்கு கண் வைத்தல், கோதுமை மா நிரப்புதல்  உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளும், கலை காலச்சார போட்டி நிகழ்வுகளும் நடைபெற்றதுடன், பல்லைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் மற்றும் இம்முறை கல்வி பொதுத்தராதர சாதரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்ற மாணவர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

சுதந்திரன் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எம்.மயில்வாகனம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் ரீ.கலையரசன், நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன், வேப்பையடி வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி திருமதி எஸ்.ஜெ.அனீஸ், சவளக்கடை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி டி.டி.ரீ.கே.சமரசிங்க உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டனர்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலந்து கொண்ட அதிதிகளினால் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.















Post a Comment

0 Comments