ஏப்ரல் 2ஆம் திகதி தனது இரு புதிய
ATM இயந்திரங்களை திகன மற்றும் தம்புளையில் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி திறந்துள்ளது. வங்கியின் உயரதிகாரிகள் மற்றும் பெறுமதியான வாடிக்கையாளர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
திகனயில் அமைந்துள்ள புதிய
ATM இயந்திரம்,
Linea
Clothing & Linea Intimates, கண்டி தொழிற்பேட்டை,
BOI, பல்லேகல எனும் முகவரியிலும், தம்புளை யுவுஆ இயந்திரம், கிமன்ஹல, இல. 754, அனுராதபுர வீதி, தம்புளை எனும் முகவரியில் அமைந்துள்ளது. புதிய
ATM இயந்திரங்கள் வங்கியின்
ATM வலையமைப்பை விஸ்தரிக்கும் திட்டத்தின் பிரகாரம் அமைந்துள்ளன. இதனூடாக வாடிக்கையாளர்களுக்கு சௌகரியமான வங்கியியல் சேவைகளை பெற்றுக் கொடுப்பது வங்கியின் எதிர்பார்ப்பாகும்.
நிகழ்வுகளின் சிறப்பு விருந்தினர்களாக திகன பகுதியில் பல்லேகல சுதந்திர வர்த்தக வலய பணிப்பாளர் ஜயலத் மொஹோத்தல மற்றும்
BOI, ஹோல்டிங்ஸ் வட பிராந்திய பொது முகாமையாளர் கீர்த்தி முனசிங்க மற்றும் தம்புளை பகுதியில் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் கிளை வலையமைப்புக்கான சிரேஷ்ட பதில் தலைவர் ஷிஹான் டேனியல் மற்றும் கிமன்ஹல ஹோட்டலின் உரிமையாளர் சாலிய தயானந்த ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
0 Comments