கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம்.பைறூஸ் அவர்களின் முயற்சியினால் "கண்ணுக்கு பலம் உங்களுக்கு சுகம்" என்ற தொனிப்பொருளில் இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு இன்று (29) மாநகரசபை உறுப்பினர் ஏ.எம்.பைறூஸ் அவர்களின் தலைமையில் 17 வட்டார உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.மேலும் இவ் இலவச சேவையின் முதல் கட்டமாக பல பயனாளிகளுக்கு சிகிச்சை முலம் கண்களை பரிசோதித்து மூக்குக்கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்விவில் கண் சிகிச்சை வைத்திய நிபுணர் ஏ.எம்.ஹஸான் அவர்களினால் தெளிவான முறையில் சிகிச்சை மூலம் பரிசோதிக்கப்பட்டு மூக்குக்கண்ணாடிகள் மக்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் இலங்கை வங்கியின் வங்கி முகாமையாளர் ஏ.ஏ.எம்.முஸ்தக்கீன் மற்றும் வட்டார நலன் விரும்பிகள் பலரும் கலந்துகொண்டனர்.
0 Comments