(எம்.எம்.ஜபீர்)
தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு அன்னமலை சக்தி இளைஞர் கழகமும் பிரதேச மக்களும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த சித்திரை புத்தாண்டு விழா கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் உதவிச்செயலாளரும் சக்தி இளைஞர் கழகத்தின் தலைவருமான பார்த்தீபன் சூரியகுமார் தலைமையில் அன்னமலை மைதானத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன், கிழக்கு மாகாண தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் எஸ்.ரவிக்குமார், சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.எம்.நஜீம், கல்முனை மாநகர சபை உறுப்பினர் பொன்.செல்வநாயகம், நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலய அதிபர் என்.பிரபாகரன், இளைஞர், யுவதிகள் பிரதேச மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கயிறு இழுத்தல், பனிஸ் சாப்பிடுதல், மா ஊதிப் பணம் எடுத்தல், சாக்கோட்டம், சைக்கிள் மெல்லோட்டம், உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது.




0 Comments