தமிழ் மக்களுக்கான நிலையான தீர்வு பெறும் வரைக்கும் ஜனநாயக ரீதியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் தவராசா கலையரசன்

(எம்.எம்.ஜபீர்)
இந்த நாட்டில் பல ஏமாற்றங்களையும், பல உயிர் இழப்புகளையும், பல வாழ்விடங்களையும் இழந்தவர்களாக எமது சமூகத்தினர் வாழ்ந்து கொண்டு வருகின்றனர். தமிழ் மக்களுக்கான நிலையான தீர்வு பெறும் வரைக்கும் ஜனநாயக ரீதியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். வெறுமனே அரசியலில் அபிவிருத்தி என்று சொல்லும் விடயத்தினை மட்டும் சாதிக்கக் கூடிய நிலைமை என்று இருந்தால் எங்களாலும் சாதித்திருக்க முடியும் என நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

நாவிதன்வெளி 15ஆம் கொளனி சுதந்திரன் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு கலை கலாச்சார விளையாட்டு நிகழ்வும் கௌரவிப்பும் நேற்று சுதந்திரன் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போது இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இன்று நாவிதன்வெளி பிரதேசத்தில் எங்களுடைய தலைமுறைக்கு பிற்பாடுதான் நிரந்தர அரசியல் பிரவேசம் இருந்து வருகின்றது இந்த அரசியல் பிரவேசம் என்பது வெறுமனே என்னால் மாத்திரம் மேற்கொள்ளப்பட்ட விடயமாக பார்க்க கூடாது எங்களுடைய பிரதேச இளைஞர்களின் ஒற்றுமையின் ஒரு எழுச்சியாகத்தான் இதனை நாங்கள் பார்க்க வேண்டியுள்ளது.  

தற்காலத்தில் இந்த அரசியல் ரீதியாக சில திறந்த முறையிலான மாற்றங்கள் அதனுடாக சில பிளவுகளும் எங்களுடைய பிரதேசங்களில் ஏற்பட்டுள்ளது. இந்நி
லை மாற்றமடைய வேண்டும் எங்களுடைய தமிழ் இனம் நிலையாக தத்தமது பிரதேசங்களில் வாழ வேண்டும் என்பதற்காக கொள்கை ரீதியான இலட்சிய சிந்தனை கொண்ட இந்த அரசியலைப் பலப்படுத்த வேண்டியது தமிழர்களின் தலையாய கடமையாக இருக்கின்றது. 

ஏனைய சமூகத்தினை போன்று ஏனைய அரசியல் தலைமைகளை போன்று எங்களுடைய தமிழ் தேசிய அரசியல் இல்லை என்பதனை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். எங்களுடைய இளைஞர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கின்ற அரசியல்வாதிகள் எதை செய்கின்றார்கள் என்ற கேள்வி எழுப்புகின்றனர். அதனை நாங்கள் நியாயபூர்வமாக ஏற்றுக் கொள்கின்றோம். நாவிதன்வெளி பிரதேசத்தினை பொறுத்தமட்டில் அந்த கேள்வி பொருத்தமற்றது என நான் நினைக்கின்றேன். ஏனென்றால் நாங்கள் குறுகிய காலத்தில் அரசியலில் பிரவேசித்திருத்தாலும் பல பணிகளை மக்களுக்காக செய்திருக்கின்றோம். 

பாதிக்கப்பட்ட மக்களுக்கான தேவைகள் அதிகமாக இருக்கின்றன. அதற்காக எல்லாவற்றையும் நிறைவு செய்து விட்டோம் என்று சொல்லவில்லை. இந்த பிரதேசத்தவன் என்ற வகையில் அனைத்து தேவைகளையும் நிறைவு செய்யும் கடப்பாடு எனக்குள்ளது. நிட்சயமாக அந்த பணி முன்னெடுக்கப்படும் அதில் எந்த விதமான மாற்றுக் கருத்துமில்லை. தற்காலத்தில் இந்த சமூகத்தில் பல தவறுகளை செய்தவர்கள் அரசியலில் பிரவேசித்து எமது சமூகத்தினை கூறு போடுவதற்கு பல முன்னெடுப்புக்களை முன்னெடுக்கின்றனர். இவர்களை போன்று பலர்களை இந்த காலத்தில் சந்தித்து இருக்கின்றோம். 14 வருட காலத்தில் எத்தனை பேர்களை இழந்திருக்கின்றோம் ஆயுத அச்சுறுத்தல்கள் எல்லாம் வந்திருக்கின்றன. இதெற்கல்லாம் அஞ்சி ஒழியக் போபவர்கள் நாங்கள் அல்ல. எங்களுடைய மக்களுக்காக எங்களுடைய இனத்திற்காக நாங்கள் பணியாற்ற இருக்கின்றோம்.

நாங்கள் எந்த சக்திக்கும் சோரம் போனவர்கள் அல்ல. எங்களுடைய இனத்திற்காகவும் சமூகத்திற்காகவும் வாழுவர்கள். தமிழ் இனம் நாட்டில் எந்த பாகத்தில் இருந்தார்கள் என்பதை வரலாற்று சான்றைப் படிப்பதன்  மூலம் அறிவீர்கள்.

நான் மாத்திரம் இந்த பிரதேசத்தில் அரசியல்வாதியாக தொடர்ந்தும் இருக்க முடியாது. அவ்வாறு நம்பியிருக்கவும் முடியாது. புதிய தலைவர்களை உருவாக்க வேண்டும். இருந்தாலும் அந்த புதிய தலைவர்கள் எங்களுடைய சமூகத்தினை அத்துடன் எங்களுடைய தலைவர்களை இழிவு படுத்துகின்றவர்களை நாங்கள் தலைவர்களாக்கவும் முடியாது. எங்களுடைய இனத்திற்காக எங்களுடைய சமூகத்திற்காக இந்த மண்ணுக்காக எவர் முன்னிட்டு உழைக்கின்றாரோ அவர்களை தமிழ் தேசியத்தின் தலைவராக ஏற்று அரசியலில் முன்னுரிமை வழங்குவோம் எனவும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments