சவளக்கடை பொலிஸ் சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா (படங்கள்)


(எம்.எம்.ஜபீர்)
தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு சவளக்கடை பொலிஸார்  ஏற்பாடு செய்த சித்திரை புத்தாண்டு கலை காலாச்சார விளையாட்டு விழா  பொலிஸ் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.எம்.நஜீம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நாவிதன்வெளி கோட்டக் கல்வி பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து, நாவிதன்வெளி பிரதேச சபை செயலாளர் எம்.இராமக்குட்டி, சவளக்கடை உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி டி.டி.ரீ.கே.சமரசிங்க, சமய தலைவர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், தமிழ், முஸ்லிம், சிங்கள இளைஞர் யுவதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
 இதன்போது கயிறு இழுத்தல், முட்டி உடைத்தல், பலூன் நடனம், சங்கீத கதிரை, கரப்பந்து, பனிஸ் சாப்பிடுதல், யானைக்கு கண் வைத்தல் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகள், கலை காலச்சார போட்டி நிகழ்வுகளும் நடைபெற்றன.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலந்து கொண்ட அதிதிகளினால் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.




















Post a Comment

0 Comments