நாவிதன்வெளி பிரதேச சபையின் கன்னி அமர்வு

(எம்.எம்.ஜபீர்)
அம்பாரை மாவட்டத்திலுள்ள நாவிதன்வெளி பிரதேச சபையின் கன்னி அமர்வு நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் தவராசா கலையரசன் தலைமையில் நேற்று (19) பிரதேச சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது 2018ஆம் நிதி ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதுடன், பதிலீட்டு ஊழியர்களுக்கான சம்பள அனுமதியும் பெற்றப்பட்டது. இதேவேளை  பிரதேசத்திலுள்ள அரச காணிகளை பாதுகாத்தல்,  குடிநீர் பிரச்சினை, வீதி அபிவிருத்தி,  சுகாதாரம், உட்கட்டமைப்பு அபிவிருத்தி, பிரதேச மக்களின் சமூக நலத்திட்டங்கள்  தொடர்பான பிரேரணைகள் முன்வைக்கப்பட்டு சபையின் அங்கீகாரம் பெறப்பட்டது.

நாவிதன்வெளி பிரதேச சபையின் உதவி தவிசாளர் ஏ.கே.அப்துல் சமட் உட்பட உறுப்பினர்களின் கன்னி உரைகளும் இடம்பெற்றதுடன், பிரதேச சபை உறுப்பினர்களான சி.குணரெத்தினம், அ.சுதர்சன், எம்.நிரோஜன், எம்.ஐஎம்.ஜஹான் ஆகியோர்கள் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 


Post a Comment

0 Comments