இலங்கையில் ஆதன வீட்டுமனை தனியுரித்து முதன்மை நிறுவனமான RE/MAX

உலகளாவிய ஆதன வீட்டுமனை தனியுரித்து முதன்மை நிறுவனமான RE/MAX  இலங்கையில் தமது வாய்ப்புகளை மறுபரிசீலனை செய்கின்றது.

RE/MAX  வருடாந்த மாநாட்டில் இலங்கையின் முதன்மை தரகுச்சேவையாளர்கள், தரகர்கள் மற்றும் முகவர்களுக்கு விருதளித்து கௌரவம்
உலகளாவிய மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கான துணைத்தலைவர், ஆதன தொழிற்துறையினை மறுசீரமைப்பு செய்தலில் RE/MAX  இன் வகிபாகம் குறித்து வலியுறுத்தல்

2018 ஏப்ரல் 12, கொழும்பு, இலங்கை:  தென்னாசிய பிராந்தியத்தில், அதீத உட்கட்டமைப்பு மேம்பாடுகள், தொலைநோக்கு மிக்க இலக்குகள் மற்றும் பன்முக மூலதன முதலீடுகள் போன்ற பல்வேறு காரணிகள் காரணமாக இலங்கையானது, மிகச்சிறந்த வளர்ச்சிப்போக்கினை காண்பித்து வருகின்றது.

 உலகின் முன்னணி ஆதன வீட்டுமனை தனியுரித்து நிறுவனமான (சநயட நளவயவந கசயnஉhளைந டநயனநச) RE/MAX ஆனது மேம்பாடடைந்து வரும் ஸ்திரமான இந்த வாய்ப்பினை பற்றியவாறு, இந்த தீவுத்தேசத்தில், தமது இருப்பினை மேலும் பலப்படுத்தியவாறு, வளர்ச்சியடைவதனை உத்தேசமாக கொண்டுள்ளது.RE/MAX  ஸ்ரீலங்கா இன் வருடாந்த டீடயஉம-வுநை மாநாட்டில் (யுnரெயட டீடயஉம-வுநை ஊழnஎநவெழைn) பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த உலகளாவிய மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கான துணைத்தலைவர், RE/MAX  உலக தலைமையகம், ஐக்கிய அமெரிக்கா - ஷவ்னா கில்பர்ட் அவர்கள், இலங்கையானது புதிய யுகம் ஒன்றினை நோக்கிய பயணத்தின் உச்ச முனையில் நிற்கும் இந்த சந்தர்ப்பத்தில், வளர்ந்து வரும் ஆதன தொழிற்துறையின் பெறுமானத்திற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையிலான முனைப்புகளை RE/MAX  கண்டிப்பாக மேற்கொள்ளும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இலங்கையை போலவே ஏனைய ஆசிய நாடுகளில், RE/MAX  எவ்வாறு காத்திரமான வெற்றியினை பெற்று வருகின்றது என்பது குறித்து பகிர்ந்து கொண்ட அவர் '45 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தினை கொண்டுள்ள நாம், 100ற்கும் மேற்பட்ட நாடுகளில் 7,500 ற்கும் மேற்பட்ட அலுவலகங்களுடன், 115,000 ற்கும் மேற்பட்ட முகவர் வலையமைப்பின் உறுதுணையோடு இயங்கி வருகின்றோம். இந்த பாரிய எண்ணிக்கையானது, உலகளாவிய ரீதியில் எமது வலுவினை பறைசாற்றுகின்றது. RE/MAX  ஸ்ரீலங்கா உடன், இலங்கையின் ஆதன தொழிற்துறை சந்தையினை மறுசீரமைத்து, புனரமைக்க எம்மால் முடியும். ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உள்ள சாத்தியம் மற்றும் எமது காற்தடங்களை விஸ்தரிப்பதற்கான வாய்ப்புகளை அடையாளம் கண்டுகொண்டுள்ள நாம், இப்பிராந்தியத்தில் அதீத வெற்றியினை பெற்றுள்ளோம் என்றால் மிகையாகாது. இதன் ஊடாக, எமது நிகரற்ற சேவைகளை இப்பிராந்தியமும் பெற்றுக்கொள்வதற்கு வழியமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

வினைத்திறன்மிகு அபிவிருத்தி பாதையினை இலங்கையில் அவதானித்துள்ள நாம், எதிர்காலத்திலும் இந்நாட்டின் முன்னேற்றங்களுக்கு கைகொடுத்து, அதன் ஒரு அங்கமாக திகழ்வதற்கு எண்ணியுள்ளோம். இதன் காரணமாகவே, நாம் இலங்கையில் நாம் செயலாற்றுகின்றோம்' என தெரிவித்தார்

இந்த மாநாட்டின் விசேட அதிதிகளாக கலந்துகொண்ட கூட்டாண்மை முனைவோர், இங்கு இடம்பெற்ற கலந்துரையாடல்களில் பன்முக பரிமாணங்களை அளித்தனர். கப்பிட்டல் மஹாராஜா குழுமத்தின் பணிப்பாளர் நிமால் கூக் அவர்கள் சமகால ஆதன தொழிற்துறை குறித்த மதிப்பாய்வினை வெளிப்படுத்தியமுடன், உள்நாட்டு தொழிற்துறையில், சர்வதேச வர்த்தகநாமங்கள் குறிப்பாக Shangri La, JW Marriott, Ritz Carlton, China Development போன்ற நிறுவனங்களின் வருகையானது, குறிப்பிடத்தக்க மேம்பாட்டினை அளிப்பதாக தெரிவித்தார். சிலோன் சேம்பர் ஒஃப் கொமர்ஸ் தலைவர் ராஜேந்திரா தியாகராஜா அவர்கள் குறிப்பிடுகையில் 'எழுச்சியுறும் சந்தை என்ற வகையில் இலங்கை தமது இடத்தினை தரமுயர்த்தியுள்ள நிலையில், இலங்கையில் RE/MAX இன் பிரசன்னமானது,

தொழிற்துறை நேர்த்தி மற்றும் உலகத்தரமிக்க சேவைகளை பெற்றுக்கொள்வதான அம்சங்களை எதிர்கொள்வதில் அதிகரித்து வரும்  வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு மற்றும் கேள்வியினை பூர்த்தி செய்தலை சாத்தியமாக்கும்' என தெரிவித்தார். சொப்ட்லொஜிக் ஆதனங்கள் நிறுவன பணிப்பாளர் கலாநிதி. ஸ்டீபன் அந்தோனியஸ் அவர்கள் மற்றும் இலங்கை தொழின்முனைவோர்  சேம்பர் தலைவர் தினுக் ஹெட்டியாராச்சி ஆகியோரும் இது குறித்து தமது நேர்மறை கருத்துகளை வழங்கினர். உயரடுக்கு கட்டடங்களின் மேம்பாடு தொடர்பில் செயற்திறன் மிகு சந்தைப்படுத்தலின் அவசியம் குறித்து, முன்னவர் வலியுறுத்த, தேசிய இலக்குகளை அடைவதில், தொழின்முனைவோரின் முக்கியத்துவம் குறித்து பின்னவர் சுட்டிக்காட்டினார். 

RE/MAX ஆனது 2017ம் ஆண்டில் ஆதன தொழிற்முறையில் குறிப்பிடத்தக்க வகையில் சூ1 ம் இடத்தினை பெற்றுக்கொண்டதுடன், குசயnஉhளைந வுiஅநள முதன்மை 200 தரவரிசைப்பட்டியலில் அனைத்து தனியுரித்து நிறுவனங்களிலும் எட்டாவது இடத்தினை பெற்றுக்கொண்ட இந்நிறுவனம், ஆதன தொழிற்துறையில், உயர் நிபுணத்துவமிக்க சேவைகளை அளிக்கும் அனுபவமிக்க ஸ்தாபனமாக கோலோச்சுகின்றது. 'தனித்துவமிக்க  முதன்மை உரித்து RE/MAX  வலையமைப்பு கட்டமைப்பின் ஊடாகவே, இலங்கையில், சுநுஃஆயுஓ ஆனது பன்முக சேவைத்தொகுப்புகளை தமது அனுபவத்துடன் இணைத்து வழங்குகின்றது. இலங்கையில் 60ற்கும் மேற்பட்ட முகவர்கள், ஏழு இடங்களில் இருந்து, உலகளாவிய வெளிப்பாட்டினை கொண்ட சேவைகளை நாட்டு மக்களுக்கு அளிக்கின்றனர்' என்று பிராந்திய உரிமையாளரான சுஜான் ஷான் அவர்கள் தெரிவித்தார். 'எமது இலக்கானது, உயர் பயிற்சியும், திறனும் பெற்ற, ஊக்கமிகுந்த ஆதன தொழிற்துறை படையணியினை ஈர்த்து, அவர்களின் உதவியோடு சந்தை முதல்வனாக திகழ்வதாகும். இந்த ஆதன தொழிற்துறையாளர்கள், இலங்கையில் RE/MAX  இனை அங்கீகாரம் பெற்ற வர்த்தக நாமமாக உருவாக்குவார்கள் ' என மேலும் குறிப்பிட்டார்

உலகின் சூ1 இடத்தினை பெற்றுள்ள ஆதன வீட்டுமனை நிறுவனமாக திகழும் RE/MAX   இனை இலங்கையின் முதற்தர தனியுரித்து வலையமைப்பாக மாற்றும் நோக்கில் செயலாற்றுவதாக தெரிவித்த பிராந்திய பணிப்பாளர் மதனி கணேஷ் அவர்கள் 'இலங்கைக்கான எமது திட்டங்கள் மிக தூரநோக்குடையவை. உலகளாவிய ஆதன தொழிற்துறையில் சுஜன் மற்றும் நான் கொண்டுள்ள ஒருங்கிணைந்த, பரந்துபட்ட அனுபவமானது, இலங்கையில் RE/MAX  இனை சிறந்த நிலைக்கு கொண்டு வருவதில் உறுதுணையாக விளங்கும் என்பதுடன், இலங்கையின் ஆதன தொழிற்துறையில் RE/MAX சிறப்பான மாற்றத்தினை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. தொழினுட்பத்தின் உதவியுடன், உலகளாவிய பிரசன்னம், பரிந்துரை வலையமைப்பு, உன்னத வர்த்தக நாம விழிப்புணர்வு, கல்வி கற்றலுக்கான வாய்ப்புகள் மற்றும் ஏனைய போட்டிமிகு அனுகூலங்களை கொண்ட, சான்று மற்றும் பயிற்சி பெற்ற நிபுணத்துவ முகவர்களை கொண்ட வலுவான ஒரு வலையமைப்பினை உருவாக்கி, அதனை மேம்படுத்துவதே எமது இலக்காகும் ' என அவர் தொடர்ந்து தெரிவித்தார்

இந்நிகழ்வின் போது, மிகச்சிறந்த செயற்திறனை வெளிப்படுத்திய தரகர்கள் மற்றும் முகவர்களுக்கு அளிக்கப்பட்டது.RE/MAX முhயநெ ப்ரொப்பர்ட்டீஸ் உரிமையாளர் ப்ரையன்ட் டி சில்வா அவர்கள், முதன்மை தரகுச்சேவையளிப்பாளர் விருதினை பெற, RE/MAX ஐகெinவைல தரகு உரிமையாளர் ஹசாம் ஹமீட் அவர்கள் மிகச்சிறந்த தரகு உரிமையாளர் விருதினை பெற்றார். RE/MAX North Realty  தரகு உரிமையாளர் லதன் வரதராஜா அவர்கள் முதன்மை ஆட்சேர்ப்பு தரகு முகவர் விருதினை பெற, மிகச்சிறந்த தரகு வர்த்தகநாமம் விருதினை Alessandro Ponzi ப்ரொப்பர்ட்டீஸ் தரகு உரிமையாளர்களான யுடநளளயனெசழ Pழணெi மற்றும் ஆயசவதin ஏடநம ஆகியோர் பெற்றனர். RE/MAX Khane ப்ரொப்பர்ட்டீஸ் இனை சேர்ந்தMartjin Vlek  பண்டார அவர்கள், முதன்மை முகவர் தயாரிப்பாளர் விருதினை பெற்றுக்கொண்டார்




Post a Comment

0 Comments