இலங்கையில் பல பாகங்களில் பரவலாக பல்வேறுபட்ட சேவையினை மேற்கொண்டுவரும் வீரக்குட்டி பொன்னம்பலம் அறக்கட்டளை அமைப்பானது இவ்வருடம் வீரச்சோலை(மிகவும் பின்தங்கிய அதிகஸ்ட கிராமம்) இக்கிராமத்திலிருந்து யாழ்ப்பாணம் மருத்துவ பீடத்திற்கு தெரிவான மாணவி S..தட்சாயிணி அவர்களுக்கு அவரின் கல்வி திறனை பாராட்டி அவ்மாணவியை மென்மேலும் கற்றலின் ஊக்குவித்தலுக்காக வீரக்குட்டி பொன்னம்பலம் அறக்கட்டளை அமைப்பின் ஸ்தாபகரும் SRILANKAN GOLD SMITH ASSOCIATION அமைப்பின் தலைவருமாகிய பொன். சங்கர் அவர்களினால் மடிக்கணணியொன்று அவ்மாணவிக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது. நாவிதன்வெளி வீரச்சோலைக் கிராமத்திலிருந்து யாழ்ப்பாணம் மருத்துவ பீடத்துக்கு தெரிவாகி மாணவி தட்சாயிணி தான் கல்வி கற்ற பாடசாலைக்கும் அக்கிராமத்திற்கும் புகழாராம் சேர்த்துள்ளார். இம்மாணவியை திருமதி பொன்னம்பலம் அவர்கள் வாழ்த்தி மடிக்கணணி வழங்கப்படுவதையும்
மேலும்அமைப்பின் பணிப்பாளர் மற்றும் மாணவியின் பெற்றோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.




0 Comments