சாளம்பைக்கேணி-01 வீரத்திடல் அல்-ஹிதாயா பாடசாலை உள்வீதி மக்களின் பாவனைக்கு கையளிப்பு


(எம்.எம்.ஜபீர்)

நாவிதன்வெளி பிரதேச சபையின் கீழ் கடந்த காலங்களில் தூர்ந்து போயுள்ள வீதிகளை அபிவிருத்தி செய்து பொது மக்களின் பாவனைக்கு கையளிக்கும் வேலைத்திட்டங்களை நாவிதன்வெளி பிரதேச சபை முன்னெடுத்து வருகின்றது.

இதற்கமைய சாளம்பைக்கேணி-01 வீரத்திடல் அல்-ஹிதாயா பாடசாலை உள்வீதியை செப்பனிடும் வேலைத்திட்டம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் ஏ.பீ.சுபைதீன் வேண்டுகொளுக்கினங்க  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் தவராசா கலையரசன் அதிதிகளாக கலந்து கொண்டு வீதியின்  செப்பனிடும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.

இதில் நாவிதன்வெளி பிரதேச சபை உதவி தவிசாளர் ஏ.அப்துல் சமட், கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஏ.எம்.மஹ்ரூப், சவளக்கடை பொலிஸ் உத்தியோகத்தர்கள், நீர்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.






Post a Comment

0 Comments