சியபத பினான்ஸின் 2017 ஆம் ஆண்டுக்கான நிதிப் பெறுபேறுகள் அதியுயர் நிலையில்




வரிக்கு முந்திய இலாப வளர்ச்சி 52.42%
நிகர இலாப வளர்ச்சி 52%
நிகர வட்டி வருமான வளர்ச்சி 51%
மொத்த சொத்துக்களின் வளர்ச்சி 43%

சியபத பினான்ஸ், சம்பத் வங்கி குழுமத்தின் மிகப் பெரிய ஒரு துணை நிறுவனமாகும். அது, 2017 ஆம் ஆண்டுக்கான தனது நிதிப் பெறுபேறுகளை மிகவும் பெருமையுடன் அண்மையில் வெளியிட்டுள்ளது. குறித்;த ஆண்டில் சியபத பினான்ஸ் நிறுவனம் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தியுள்ளதோடு, இத்துறையின், அதன் சகல பிரிவுகளிலும் முன்னணி நிலையில் திகழ்ந்துள்ளது. நிதித்துறையில் எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறுகளை அடைந்து நாட்டின் முன்னணி நிதி நிறுவனமொன்றாக மாறியுள்ளது.

சியபத பினான்ஸ் நிறுவனம், 2017 ஆம் ஆண்டின் நிதிப் பெறுபேறுகளுக்கு அமைய, வரிகளுக்கு பிந்திய இலாபமாக ரூபா 498.86 மில்லியனைப் பதிவு செய்துள்ளது. 2016 ஆம் ஆண்டின் ரூபா 327.28 மில்லியனுடன் ஒப்பிடுகையில் அது, 52மூ குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகக் காணப்படுகின்றது.

மொத்த வருமானத்தின் கீழ் நிறுவனத்தின் மொத்த வட்டி வருமானம் மிகப் பெரிய அளவில் அதாவது, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 62%வளர்ச்சியுடன் 4.6 பில்லியன் ரூபாவாக 2017 ஆம் ஆண்டில் பதிவாகியது. வியாபார நடவடிக்கைகளில் வளர்ச்சி காணப்பட்டதோடு, லீசிங் மற்றும் கடன் வசதிகள் ஆகிய வர்த்தகங்களில் ஏற்பட்ட இடரை சிறப்பாக பேணி செயற்பட்டதனால், வருமானமும் சிறந்த பெறுபேறுகளும் சாத்தியமாக அமைந்தன.

நிகர வட்டி வருமான வளர்ச்சியும், நிகர கட்டணங்கள் மற்றும் தரகு வருமான வளர்ச்சியும் இலாப வளர்ச்சிக்குப் பிரதான காரணமாக அமைந்திருந்தன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2017 ஆம் ஆண்டில் நிகர வட்டி வருமானம் 51% வளர்ச்சியை, அதாவது, 1.84 பில்லியன் ரூபாவாக இருந்தது. கடந்த ஆண்டில் அது 1.22 பில்லியனாகக் காணப்பட்டது. மேலும், இந்த அதிகரித்;த இலாபம் காரணமாக, சொத்துக்கள் மீதான வருமானம் (சுழுயு) 1.91% ஆகவும், மூலதனத்தின் மீதான வரவு (சுழுநு) 23.05% ஆகவும் அமைந்திருந்தன. கடந்த ஆண்டுகளில் இவை 1.81மூ மற்றும் 18.35% ஆகக் காணப்பட்டன.

நிறுவனம், 2017 ஆம் ஆண்டில் மிக முக்கியமான ஒரு மைல்கல்லை அடைந்து கொண்டுள்ளது. அதன் மொத்தச் சொத்துக்களின் பெறுமதி ரூபா 29.81 பில்லியனாகும். இது, 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 43% வளர்ச்சியாகும். கடந்த ஐந்து வருடங்களில் மொத்தமாக 33% சராசரி வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது. நிறுவனம், அதன் முற்பண தொகுதிகளில் சாதாரண சராசரியையும் தாண்டி, 2017 ஆம் ஆண்டில் நிலவிய வர்த்தக சவால்களுக்கு மத்தியில் ஒரு வளர்ச்சியை  அடைந்து கொண்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

2016 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில், சியபத பினான்ஸ் நிறுவனம், கடன் வசதிகளை அறிமுகப்படுத்தியிருந்தது. இதன் காரணமாக, அது, குறித்த ஆண்டில் 1.98 பில்லியன் ரூபா வளர்ச்சியை வெளிப்படுத்தி 266மூ வளர்ச்சி வேகத்தை எட்டியது. லீசிங், வாடகைக் கொள்வனவு ஆகியன 5.4 பில்லியன் ரூபாவினால் வளர்ச்சியடைந்திருந்தது. 2016 ஆம் ஆண்டில் இருந்த ரூபா 20.12 பில்லியனுடன் ஒப்பிடுகையில், அது 37%வளர்ச்சியாகும். தங்க நகை அடகு வசதி 2.56 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்டதோடு, 794 மில்லியன் ரூபா வளர்ச்சியை (45% வளர்ச்சி) வெளிப்படுத்தியது. தங்க நகை அடகுச் சேவை மொத்த கடன்களில் 9மூ ஆகும்.

2016 ஆம் ஆண்டின் 19மூ வாடிக்கையாளர்களின் வைப்பானது, இவ்வருடம் 36% வரை அதிகரித்து மூலதன வளர்ச்சியைக் காண்பித்துள்ளது. வைப்புகள் 5.97 பில்லியன் ரூபாவினால் வளர்ச்சியடைந்துள்ளதோடு கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் அது 178% வளர்ச்சியாகும். சியபத பினான்ஸ் மீது வாடிக்கையாளர்கள் வைத்துள்ள நம்பிக்கையை இது வெளிப்படுத்துகிறது. 2017 ஆம் ஆண்டில் பங்குதாரர்களின் மூலதனம் 28% ஆல் அதிகரித்துள்ளது.

2017 டிசம்பர் 31 இல், மூலதனப் போதுமை வீதங்கள் 9.44மூ ஆக வரிசை (வுநைச) ஐ க்கும் வரிசை ஐ மற்றும் வரிசை ஐஐ க்கு 14.16மூ ஆக (இலங்கை மத்திய வங்கியின் குறைந்தபட்ச தேவைப்படான முறையே 5% மற்றும் 10% என்பனவற்றுடன் ஒப்பிடுகையில் தேவைக்கு அதிகமாகவே காணப்படுகிறது) சியபத பினான்ஸ் காணப்பட்டதோடு, அது, 2016 ஆம் ஆண்டில் 13.93% ஆக 14.16% வரை அதிகரித்தது. இதற்குப் பிரதான காரணம், நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட முறிகள் 01 பில்லியன் ரூபா பெறுமதியை கொண்டு வந்து சேர்த்தமையாகும்.

இந்த நிதிப் பெறுபேறுகள் பற்றி, சியபத பினான்ஸ் நிறுவனத்தின் தலைவர் திரு. சன்ன பலன்சூரிய கூறுகையில், 'நிறுவனத்தின் நிதிப் பெறுபேறுகளைக் கண்டு நாம் பெரும் மகிழ்ச்சியடைவதோடு, எமது கடின உழைப்புக்குப் பலன் கிடைத்துள்ளமை இதன் மூலம் தெளிவாகிறது' என்று கூறினார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர், நாம் மேற்கொண்டுள்ள மாற்றங்களும், புதிய அறிமுகங்களும், எமக்கு சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தியுள்ளதோடு, சியபத பினான்ஸ் தொடர்ந்தும் பெறுபேறுகளிலும் நவீனத்துவத்திலும் வாடிக்கையாளர் சேவையிலும் சிறந்து விளங்கும் என்பதை உறுதிப்படுத்துகிறேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். நாம் புதிதாக இணைத்த பல்வேறு படைப்புக்கள் பலனளித்துள்ளன. மேலும், நிதிப் பெறுபேறுகளும் புதிய படைப்புக்களும் வாடிக்கையாளர் சேவையை மேலும் அதிகரிக்கும் என்பது எனது நம்பிக்கையாகும் என்றும் அவர் கூறினார்.

சியபத பினான்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திரு. சமன் ஹேரத் கருத்து வெளியிடுகையில், 'சியபத பினான்ஸ் நிறுவனத்தின் 2017 ஆம் ஆண்டுக்கான பெறுபேறுகளைக் கண்டு நாம் பெருமகிழ்ச்சியடைகின்றோம். விசேடமாக, வைப்புக்களின் 178% வளர்ச்சி மற்றும் பங்குதாரர் நிதியின் வளர்ச்சி என்பன பெருமைப்படக் கூடிய விடயங்களாகும். சியபத பினான்ஸ் மீதான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை இது உறுதிப்படுத்துகிறது. வாடிக்கையாளர்களின் மூலமே நிறுவனத்தின் வளர்ச்சி உறுதிப்படுத்தப்படுகிறது என்பது எனது நம்பிக்கையாகும். அதனை எப்போதும் சிறப்பாக நிலைநாட்டுவதே வளர்ச்சியி;ன் இரகசியமாகும்' என்று கூறினார்.

சியபத பினான்ஸ் பிஎல்சி, பல்வேறு நிதித் தீர்வுகளான நிலையான வைப்புக்கள், லீசிங், வாடகைக் கொள்வனவு, சொத்துக் கடன், வர்த்;தகக் கடன், தனிப்பட்ட கடன், பெக்டரிங் மற்றும் தங்க நகை அடகு கடன் என்பவற்றை பெற்றுக் கொடுக்கிறது. அது, வாடிக்கையாளர்களின் வசதி கருதி, நாடு தழுவிய ரீதியில் 26 கிளைகளைக் கொண்டு இயங்கி வருகிறது.

சியபத பினான்ஸ் நம்பிக்கை அவ்வாறே!



Post a Comment

0 Comments