செலிங்கோ லைஃப் 2018 பிறேன்ட் பினான்ஸ் தர வரிசையில் காப்புறுதி பிரிவில் உச்சத்தில்



இலங்கையில் 2018ம் ஆண்டுக்கான மிகவும் பெறுமதி வாய்ந்த சிறந்த 50 வர்த்தக முத்திரைகளில் செலிங்கோ லைஃப்பும் இடம் பிடித்துள்ளது. பிறேன்ட் பினான்ஸ் லங்கா நிறுவனத்தின் இந்த தர வரிசையில் நாட்டில் அதி உயர் இடம் பிடித்துள்ள ஆயுள் காப்புறுதியாகவும் இது திகழ்கின்றது.
பிறேன்ட் பினான்ஸ் 2018ம் ஆண்டில் செலிங்கோ லைஃப்பின் வர்த்தக முத்திரையின் பெறுமதியை 3680 மில்லியன் ரூபாவாக மதிப்பிட்டுள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தர வரிசையில செலிங்கோ லைஃப்; இரண்டு இடங்கள் முன்னோக்கி நகர்ந்துள்ளது.

இந்த தர வரிசை பற்றி கருத்து வெளியிட்ட செலிங்கோ லைஃப் முகாமைத்துவப் பணிப்பாளர் ஆர்.ரெங்கநாதன் 'இந்த கீர்த்திமிக்க அங்கீகாரமானது செலிங்கோ லைஃப் கடந்த 14 வருடங்களாக தொடர்ந்து செயற்பாட்டில் மட்டும் முதலாம் இடத்தில் நிற்கவில்லை மாறாக வர்த்தக முத்திரை பெறுமதியிலும் அது முன்னணியில் உள்ளது என்பதை நிரூபித்துள்ளது. நீண்ட காலமாக தனது வாடிக்கையாளர்களின நம்பிக்கையை கட்டி எழுப்பி அதை தக்கவைத்து அதன் மூலம் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் ஒரு கம்பனி என்ற வகையில்; இது மிகவும் முக்கியமானது என்றார்
கொழும்பு பங்கு பரிவர்தனை நிலையத்தில் பட்டியல் இடப்பட்டுள்ள கம்பனிகளின் நிதித் தரவுகளை மிக விரிவாக ஆராய்ந்து மதிப்பீடு செய்தும், சுதந்திரமான ஒரு சந்தை ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் விரிவான சந்தை ஆராய்ச்சிகளை பிரத்தியேகமாக மேற்கொண்டும் நாட்டின் மிகவும் பெறுமதியான மற்றும் உறுதியான வர்த்தக முத்திரைகள் தெரிவு செய்யப்பட்டு கடந்த 15 வருடங்களாக பிறேண்ட் பினான்ஸ் லங்கா நிறுவனத்தால் வெளியிடப்பட்டு வருகின்றன.

ஐளுழு 10668 தொழில்துறை தரப்படுத்தல் முறைகளுக்கு ஏற்;ப வர்த்தக முத்திரை பெறுமான முறைகளைப் றோயல்டி றிலீப் அனுகுமுறையின் கீழ் இந்த தலைசிறந்த வர்த்தக முத்திரைகள் தெரிவு செய்யப்படுகின்றன.
சந்தை நிதி நிலைமைகளை சிறந்த முறையில் புரிந்து கொள்வதற்கு அர்ப்பணத்துடன் கூடிய விஷேட ஆலோசனை சேவையாகக் கருதப்படும் மற்றும் வர்த்தக முத்திரை மதிப்பீடு, சந்தைப்படுத்தல் பொறுப்புக் கூறல் என்பனவற்றில் அதி உயர் தொழிற்சார் அனுகுமுறையை வழங்கும் பிறேன்ட் பினான்ஸ் நிறுவனம் லண்டனில் தலைமையகத்தைக் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் அதற்கு அலுவலக கிளை வலையமைப்புக்களும் உள்ளன. இலங்கையில் பிறேன்ட் பினான்ஸ்ஸின் வருடாந்த தரவரிசை டுஆனு யால் வெளியிடப்படுகின்றது.

2017 முடிவில் செலிங்கோ லைஃப் 106 பில்லியன் சொத்துக்களைக் கொண்டுள்ளது. மொத்த வருமானம் 25.6 பில்லியன், சந்தா வருமானம் 15.76 பில்லியன், ஆயுள் நிதியம் 81.72 பில்லியன், மூலதன வரிசை 92.26 பில்லியனுக்கும் அதிகம், தேறிய இலாபம் 9.47 பில்லியன், 14வது வருடமாக தொடர்ந்து ஆயுள் காப்புறுதி சந்தைப் பிரிவில் தலைமை தாங்கும் நிறுவனமாகவும் திகழுகின்றது.

வேர்ள்ட் பினான்ஸ் சஞ்சிகையால் 2017ம் ஆண்டில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக இலங்கையின் மிகச் சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனமாகத் தெரிவு செய்யப்பட்ட செலிங்கோ லைஃப் உள்ளுர் ஆயுள் காப்புறுதித் துறையில் புதிய கண்டு பிடிப்புகள், அபிவிருத்தி, வாடிக்கையாளர் சேவை, தொழிற்சார் அபிவிருத்தி, கூட்டாண்மை சமூகப் பொறுப்பு என்பனவற்றுக்கும் புகழ்பூத்த நிறுவனமாகும்.


படவிளக்கம்: செலிங்கோ லைஃப் சந்தைப்படுத்தல் பிரிவு பிரதி பொது முகாமையாளர் சமித ஹேமச்சந்திர (வலது) பிறேன்ட் பினான்ஸின் விருதை, பிறேன்ட் பினான்ஸ் லங்கா முகாமைத்துவப் பணிப்பாளர் ருச்சி குணவர்தனவிடமிருந்து பெற்றுக் கொள்வதைப் படத்தில் காணலாம்.


Post a Comment

0 Comments