கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தினால் விவசாய ஊக்குவிப்பு விசேட வேலைத்திட்டத்தின் கீழ் சவளக்கடை கமநல கேந்திர நிலைய விவசாய போதனாசிரியர்களின் ஏற்பாட்டில் நாவிதன்வெளி பிரதேசத்தில் வீட்டுத்தோட்ட பயிர்செய்கையை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு செயலமர்வும், உப உணவு பயிர்செய்கையாளர்களுக்கு மானிய அடிப்படையில் விதைகள் வழங்கும் நிகழ்வும் கமநல சேவை மத்திய நிலைய மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வு அன்னமலை விவசாய போதனாசிரியர் என்.ஜெகதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் சம்மாந்துறை வலய உதவி பணிப்பாளர் எம்.பீ.எம்.இர்ஷாத், நாவிதன்வெளி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ரீ.மோகனகுமார், பாடவிதானை உத்தியோகத்தர் எஸ்.பரமஸ்வரன், சவளக்கடை விவசாய போதனாசிரியர் ஏ.எல்.றதீனா வேகம், கமநல சேவை நிலைய உத்தியோகத்தர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
வீட்டுத்தோட்டத்தில் பழமரக்கண்டுகளை கத்திரிக்கு முறைகள், புதிய தொழில்நூட்ப முறைகளை பயன்படுத்தி வீட்டுத்தோட்ட பயிர்செய்கை மேற்கொள்வது தொடர்பாகவும், வீட்டுத்தோட்ட பயிர்செய்கைக்கு சேதன பசளையின் பயன்பாடு தொடர்பாகவும் விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இதன்போது நாவிதன்வெளி பிரதேசத்தில் உப உணவு பயிர்செய்கையை ஊக்குவிக்கு நோக்கில் உப உணவு பயிர் விதைகள் கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தினால் 50வீதம் மானிய அடிப்படையில் விசாயிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.




0 Comments