கொமர்ஷல் வங்கி 'கெதரட தேகி' - 'இல்லத்திற்கு பரிசு' ஊக்குவிப்பை அறிமுகம்

ஐந்து மில்லியன் பெறுமதியான பரிசுகள் : பாரிய பரிசாக ஹையுண்டாய் Eon கார் மற்றும் ஸ்கூட்டர்
ஒரு கார், ஒரு ஸ்கூட்டர் மற்றும்  பெறுமதி மிக்க 180 வீட்டுப் பாவனைப் பொருள்கள் என மொத்தம் ஐந்து மில்லியன் ரூபா பெறுமதியான பரிசில்களை வெல்லும் வாய்ப்பு கொமர்ஷல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஒன்பது மாத காலத்தில் கொமர்ஷல் வங்கி ஊடாக வெளிநாட்டில் இருந்து அனுப்பப்படும் பணத்தைப் பெற்றுக் கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கே இந்த அதிர்ஷ்டம் கிடைக்கவுள்ளது.
வங்கியின் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் ஊக்குவிப்புத் திட்டமான 'கெதரட தேகி' மெகா ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம் இந்தப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. அடுத்த ஒன்பது மாத காலப் பகுதியில் ஒவ்வொரு காலாண்டிலும் வாடிக்கையாளர்கள் 45 பரிசுகளை வெல்லலாம். ஊக்குவிப்பின் முடிவில் 47 பிரதான பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
பாரிய பரிசான ஹையுண்டாய் நுழn காருக்கு அப்பால் இரண்டாவது பரிசாக ஸ்கூட்டர் ஒன்று வழங்கப்படவுள்ளது. இவை தவிர கொமர்ஷல் வங்கி 15 குளிர்சாதனப் பெட்டிகள், 15 சலவை இயந்திரங்கள்,15 மைக்ரோவேவ் அடுப்புகள் என்பனவற்றையும் இறுதிப் பரிசிழுப்பின் பின் ஊக்குவிப்பின் இரண்டாவது கட்டத்தில் வழங்கவுள்ளது.
ஒவ்வொரு காலாண்டு பரிசிழுப்பிலும் 15000 ரூபா பெறுமதியான பரிசுப் பொதிகளையும் வங்கி வழங்கும். 15 கேஸ் குக்கர்கள், 15 ரைஸ் குக்கர்கள் என்பனவும் அடுத்த மூன்று மாத காலத்துக்கு வெளிநாட்டில் இருந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.
கொமர்ஷல் வங்கிக்கே உரித்தான நாணயப் பரிமாற்ற மேடையான ஈ எக்ஸ்சேன்ஜ், மணிகிராம், எக்ஸ்பிரஸ் மணி, றியா என்பன மூலம் ஏப்பிரல் 1 முதல் 2018 டிசம்பர் 31 வரை பணப்பரிமாற்றம் மேற்கொள்ளும் வாடிக்கையாளர்கள் இயல்பாகவே இந்த ஊக்குவிப்பில் உள்வாங்கப்படுவர்.
விஸா நிறுவனத்தின் அனுமதிப் பத்திரம் பெற்ற டெபிட் மற்றும் யுவுஆ கார்ட்டான கொமர்ஷல் வங்கி றெமிட்டன்ஸ் கார்ட் வைத்திருப்பவர்கள் இவ்வாண்டு காலப்பகுதியில் வங்கி ஊடாக வெளிநாட்டில் இருந்து பணத்தைப் பெறுகின்ற போது சீட்டிழுப்பில் பங்கேற்கும் வாய்ப்பு இரட்டிப்பாக்கப்படும்.
' 'கெதரட தேகி' என்ற அதன் தொனிப் பொருளை மெய்ப்பிக்கும் வகையில் பரிசுகள் வீடுகளுக்கே வழங்கப்படுகின்றன. இது எமது வாடிக்கையாளரின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துகின்றது' என்று கூறினார் கொமர்ஷல் வங்கியின் டிஜிட்டல் வஙகிப் பிரிவு பொறுப்பாளர் பிரதீப் பந்துவன்ஸ. 'கொமர்ஷல் வங்கி ஏற்கனவே வெளிநாட்டு பணப்பரிமாற்ற சேவையில் வாடிக்கையாளரின் விருப்பத்தை வென்ற ஒன்றாகும். இந்தப் பிரிவில் வங்கி உரிய கவனம் செலுத்தி வருவதும், நாடு முழுவதும் உள்ள அதன் யுவுஆ வலையமைப்பு வசதிகளும் இதற்கு காரணமாகும். வெளிநாட்டில் இருந்து பணம் பெறும் எமது வாடிக்கையாளர்களுக்கான சேவையில் எமக்குள்ள அர்ப்பணத்தை மேலும் வெளிப்படுத்தும் வகையில் இந்த ஊக்குவிப்பு அமைந்துள்ளது' என்று அவர் மேலும் கூறினார்.
வெளிநாடுகளில் இருந்து பணத்தை அனுப்பும் பிரிவில் கொமர்ஷல் வங்கி மிகவும் சுறுசுறுப்பான பங்களிப்பை வழங்கி வருகின்றது. வங்கியின் பிரதான சக்திகளில் ஒன்றாக நாடு முழுவதும் உள்ள அதன் 261 கிளை வலையமைப்பு காணப்படுகின்றது. அவற்றுள் பல பொது விடுமுறை தினங்களிலும் வர்த்தக வங்கி விடுமுறை தினங்களிலும் திறந்துள்ளன. 758 ATM  வலையமைப்பையும் வங்கி கொண்டுள்ளது. கொமர்ஷல் வங்கிக்கு பணத்தை அனுப்பி வைப்பவர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொள்பவர்கள் 65க்கு மேற்பட்ட விடுமுறை வங்கி நிலையங்கள், சுப்பர் மார்க்கெட் கரும பீடங்கள், அர்ப்பணிப்புடன் கூடிய வாடிக்கையாளர் அழைப்பு சேவை, பணம் கணக்கில் வைப்பிடப்பட்டதும் அதை அறிவிக்கும் குறுந்தகவல் சேவை என பல்வேறு சேவைகளையும் நன்மைகளையும் பெற முடியும்.
தொடர்ந்து ஏழு வருடங்களாக உலகின் தலைசிறந்த ஆயிரம் வங்கிகள் வரிசையில் இடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கி 2016 மற்றும் 2017ம் ஆண்டு காலப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட உள்ளுர் மற்றும் சர்வதேச விருதுகளை வென்றுள்ளது இலங்கையின் தலைசிறந்த வங்கி, மிக உறுதியான வங்கி, மிக கௌரவமான வங்கி என பல விருதுகளை உள்ளுர் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் மற்றும் வெளியீடுகளிடம் இருந்து கடந்த பல ஆண்டுகளில் கொமர்ஷல் வங்கி பெற்றுள்ளது.

கொமர்ஷல் வங்கியின் வெளிநாட்டுச் செயற்பாடுகள் பங்களாதேஷில் 19 கிளைகளைக் கொண்டதாகவும், மியன்மாரில் யங்கூனில் பிரதிநிதிகள் அலுவலக  செயற்பாடுகளைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. 2016ல் மாலைதீவில் முதல் வரிசை வங்கியொன்றை அதிகபட்ச பங்குரிமையோடு முழு அளவில் வங்கி திறந்துள்ளது. முழு அளவிலான தனது சொந்த பணப்பரிமாற்ற சேவைகளை இத்தாலியிலும் கொமர்ஷல் வங்கி கொண்டுள்ளது.



Post a Comment

0 Comments