இலக்கம் 15யு ஜய மாவத்தை கடவத்தை என்ற முகவரியில் இந்தப் புதிய கிளை அமைந்துள்ளது. மூன்று மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டிடம் 6000 சதுர அடி பரப்பளவு கொண்டது. நான்காவது மாடி ஒன்றை எழுப்புவதற்கான விஸ்தீரண வசதியையும் இது கொண்டுள்ளது என கம்பனி அறிவித்துள்ளது. ஒரே நேரத்தில் 50 பேருக்கு பயிற்சிகள் வழங்கக் கூடிய வசதி, போதிய வாகனத் தரிப்பிட வசதி என்பனவும் இங்கு உள்ளன. 2017 ஜனவரியில் இதற்கான அடிக்கல் நடப்பட்டது.
இயற்கை ஒளியை போதிய அளவில் பாவிக்கக் கூடியதாக இந்தப் பசுமைக் கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 20முறு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஆற்றல் கொண்ட முழுமையான சூரிய சக்தி வசதி இங்கு உள்ளது. அதேபோல் குழாய் வழி விநியோக நீரின் பாவனையும் குறைக்கப்பட்டுள்ளது. அதி நவீன சக்தி வள ஆற்றல் கொண்ட மின்சார விளக்குகள், குளிரூட்டிகள் என்பன இங்கு நிறுவப்பட்டுள்ளன. மழை நீர் சேமிப்புக்கான வசதிகள், கழிவு நீர் மீள் சுற்று வசதி என்பனவும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. கட்டிட நிர்மாணத்தின் போது மரப் பாவனையும் கணிசமாகக் குற கை;கப்பட்டுள்ளதாக கம்பனி அறிவித்துள்ளது.
கடவத்தை பசுமை அலுவலகம் திறக்கப்பட்டமை பற்றி கருத்து வெளியிட்ட செலிங்கோ லைஃப்பின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஆர்.ரெங்கநாதன் 'செலிங்கோ லைஃப் அண்மையில் அதன் 30வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. நாங்கள் பத்து லட்சத்துக்கும் அதிகமான உயிர்களைக் காக்கும் வர்த்தகத்தில் இணைந்திருப்பது மட்டுமன்றி நிலைபேறு தன்மை கொண்ட விதத்தில் அதை செயற்படுத்தி வருகின்றமை தொடர்பாகவும் நாம் பெருமை அடைகின்றோம்' என்று கூறினார்.
செலிங்கோ லைப்பின் நிலைபேறு சக்தி மாதிரி வடிவமைப்பைக் கொண்ட கிளைக் கட்டிடங்கள் ஹொரணை, பாணதுறை, வென்னப்புவ, பண்டாரவளை, சிலாபம் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. இது தவிர கம்பனி அநுராதபுரம், திருகோணமலை, யாழ்ப்பாணம,; மட்டக்களப்பு, கண்டி, களுத்துறை, குருணாகல், கம்பஹா, காலி, மாத்தறை, திஸ்ஸமஹாராம, நீர்கொழும்பு, இரத்தினபுரி, கொட்டாஞ்சேனை, கல்கிஸ்ஸ ஆகிய இடங்களில் தனது சொந்தக் கட்டிடங்களைக் கொண்டுள்ளது. இவற்றுள் பல சூரிய சக்தி கட்டிடங்களாக மாற்றப்பட்டும் உள்ளன.
செலிங்கோ லைஃப்பின் தலைமைக் கட்டிடம் கொழும்பு 05 ஹெவலொக் வீதியில் அமைந்துள்ளது. இங்கு கொழும்பில் உள்ள மிகப் பெரிய சூரிய சக்தி மின் உற்பத்தி முறைகளுள் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. இது 63.18KW மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றது.
செலிங்கோ லைஃப் இலங்கை ஆயுள் காப்புறுதித் துறையில் நாடு முழுவதும் 250க்கு மேற்பட்ட மிகப் பெரிய கிளை வலையமைப்பைக் கொண்டுள்ளது. நாட்டின் 25 மாவட்டங்களில் 140 நகரங்கள், புறநகரங்கள் மற்றும் கிராமங்களில் இந்தக் கிளைகள் அமைந்துள்ளன.
வேர்ள்ட் பினான்ஸ் சஞ்சிகையால் 2017ம் ஆண்டில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக இலங்கையின் மிகச் சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனமாகத் தெரிவு செய்யப்பட்ட செலிங்கோ லைஃப் உள்ளுர் ஆயுள் காப்புறுதித் துறையில் புதிய கண்டு பிடிப்புகள், அபிவிருத்தி, வாடிக்கையாளர் சேவை, தொழிற்சார் அபிவிருத்தி, கூட்டாண்மை சமூகப் பொறுப்பு என்பனவற்றுக்கும் புகழ்பூத்த நிறுவனமாகும்.
(முற்றும்)

0 Comments