12ஆம் கொளனி கதரினா விளையாட்டுக் கழகத்தின் நேன்புப் பெருநாள் நிகழ்ச்சி அதன் தலைவர் ஏ.எம்.நளீம் தலைமையில்

(எம்.எம்.ஜபீர்)
மத்தியமுகாம் 12ஆம் கொளனி 2ஆம் வட்டாரம் கதரினா விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த நோன்புப் பெருநாள் விளையாட்டுப் போட்டி சஹிரா பாலர் பாடசாலை முன்பாக அண்மையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வு கதரினா விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஏ.எம்.நளீம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு மத்தியமுகாம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி விஜயசிங்க, மத்தியமுகாம் அரசிலன் முஸ்லிம் கலவன் பாடசாலை பிரதி அதிபர் எம்.ஐ.லாபீர், ஹைரியா ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் எம்.சீ.றஸாக், சாளம்பைக்கேணி-04 கிராம அபிவிருத்தி சங்க தலைவர் எம்.எச்.முனாப், ஆசிரியர் ஜெ.வாதுஷா மற்றும் கதரினா விளையாட்டுக் கழகத்தின் முக்கிஸ்தர்கள், யூ.எல்.றிபான், எஸ்.எம்.றிபான், எம்.எஸ்.தஸ்மீர், ஏ.எச்.றிஸ்லான், ஜஹான், ஐ.எல்.சியான், எஸ்.சஜாத், எம்.அஸீம், பசீல், எஸ்.எம்.றிஷாத்,  பிரதேச அமைப்புகளின் முக்கியஸ்தர்கள், பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது முட்டி உடைத்தல், மரதன் ஒட்டம், சங்கீத கதிரை, தலையனைச் சமர், முட்டை மாற்றுதல், கிறீஸ் மரம் ஏறுதல், கோபுரம் சரித்தல், பந்து மாற்றுதல் கிடுகு இலைத்தல், துவிச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கில் மெல்லோட்டம் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான அறிவுக்களஞ்சியம், நாடகம், சிறுவர், சிறுமிகளுக்கான போட்டி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல போட்டிகள் இடம்பெற்றது.

போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு கலந்துகொண்ட அதிதிகளினால் பெறுமதியான பரிசு பொதிகளும் மற்றும்  வெற்றிக் கேடயங்களும் வழங்கிவைக்கப்பட்டது.








Post a Comment

0 Comments