தேசிய பாடசாலைகளில் காணப்படும் சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல ஆசிரியர் வெற்றிடத்திற்கான விண்ணப்பம் கோரும் இறுதி திகதி ஜூலை 16 வரை நீடிப்பு.
-Wednesday, June 27, 2018
(நிப்ராஸ் மன்சூர்)
நாட்டின் தேசிய பாடசாலைகளில் காணப்படும் சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காக பட்டதாரிகளை தொழில் வாய்ப்புக்களில் ஈடுபடுத்தும் வேலைத்திட்த்தின் கீழ் சேர்த்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையின் 3-l (அ) தரத்திற்கு சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பம் கோரும் இறுதித் திகதி இவ்வாண்டு ஜூலை 16 வரை நீடிக்கப்பட்டுள்ளது என கல்வி அமைசின் செயலாளர் சுனில் ஹெட்டி ஆராச்சி வர்த்தமானப் பத்திரிகையில் அறிவித்துள்ளார்.
2011.11.07 ஆம் திகதிய 11/2260/504/179-1 ஐ கொண்ட அமைச்சரவை தீர்மானத்திற்கமைய சேர்த்துக்கொள்ளப்பட்ட பட்டதாரி வேலைத்திட்டம், 2005 ம் ஆண்டின் பட்டதாரி பயிற்சி வேலைத்திட்டம், மற்றும் 2008 ம் ஆண்டில் தருண அருண lll வேலைத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டு கல்வி அமைச்சிலும் அதன் கீழுள்ள திணைக்களங்கள், தேசிய பாடசாலைகள், ஆசிரியர் கல்லூரிகள், கல்வியியற் கல்லூரிகளில் சேவையாற்றும் அபிவிருத்தி உதவியாளர்கள், திட்டமிடல்/நிதி உதவியாளர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களில் இலங்கை ஆசிரியர் சேவையில் இணைவதற்கு விரும்புவோரை தேசிய பாடசாலைகளில் நிலவும் 6-11 ஆம் தரங்களில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவையின் 3-l (அ) தரத்திற்கு சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்களே கோரப்பட்டிருந்தன.
0 Comments