கல்முனை மாநகர சபையின் மாதாந்த கூட்ட அமர்வு நாளை. உறுப்பினர்களுக்காக 8 இலச்சத்தி முற்பத்தி ஐந்தாயிரம் ரூபாய்கள் மாதாந்த கொடுப்பனவு.

(நிப்ராஸ் மன்சூர்)
கல்முனை மாநகர சபையின் மாதாந்த கூட்ட அமர்வு நாளை.  உறுப்பினர்களுக்காக 8 இலச்சத்தி முற்பத்தி ஐந்தாயிரம் ரூபாய்கள் மாதாந்த கொடுப்பனவு.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த கூட்ட அமர்வு செவ்வாய்கிழமை (26) பிற்பகல் 2.00 மணிக்கு மாநகர சபையின் சபா மண்டபத்தில் முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றக்கீப்  தலைமையில் நடைபெறவுள்ளது.  சமய பிராத்தனைகளுடன் ஆரம்பமாகவுள்ள இக் கூட்ட அமர்வின் நிகழ்ச்சி நிரலில் கடந்த மாத கூட்டரிக்கையை அங்கிகரித்தல்இமுதல்வரின் உரைஇ நிதி நிலையியற் குழுக்கூட்டத் தீர்மானங்களை அங்கிகரித்தல்இ மாநகர சபை உறுப்பினர்களின் உரை மற்றும் முதல்வரின் ஏனைய அறிவித்தல்களுடன் கூட்டம் நிறைவுபெற உள்ளது.

நடைபெற இருக்கும் கூட்ட அமர்விற்கான அழைப்பிதழ் கடிதங்களை மாநகர சபையின் செயலாளர் ஏ.முகம்மது ஆரிப்யினால் மாநகர சபை உறுப்பினர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 41 கெளரவ உறுப்பினர்களை கொண்ட கல்முனை மாநகர சபையின் ஒரு மாதாந்த கூட்ட அமர்வில் கலந்து ,கொள்ளும் முதல்வர், பிரதி முதல்வர், உறுப்பினர்களுக்கு 30 ஆயிரம், 25 ஆயிரம், 20 ஆயிரம் ரூபா எனும் அடிப்படையில் மொத்தமாக 8 இலச்சத்தி முற்பத்தி ஐந்தாயிரம் ரூபாய்கள் அனுமதிக்கப்பட்ட மாதாந்த கொடுப்பனவாக வழங்கப்பட்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும்.




Post a Comment

0 Comments