முகநூலின் பயன்பாட்டினை தத்ரூபமாக சான்றுப்படுத்தும் 'முகநூலில் நான்' நூல் வெளியீடு


(றியாத் மஜீத்)
முகநூலின் பயன்பாட்டினை தத்ரூபமாக சான்றுப்படுத்தும் வகையில் டாக்டர் நாகூர் ஆரிப் எழுதிய 'முகநூலில் நான்எனும் பல்சுவை நூல் வெளியிட்டு  நிகழ்வு 
இன்று (27) புதன்கிழமை மாளிகைக்காடு றிபா மண்டபத்தில் இடம்பெற்றது.
பிறைட் பியுச்ச பவுண்டேஷனின் வெளியீட்டில் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி றமீஸ் அப்துல்லா  தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்குகிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நூலினை வெளியிட்டு வைத்தார்.
இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மொழித்துறை தலைவர் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாகல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் எந்திரிஎம்.ஆர்.எம்.பர்ஹான்கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் .எல்.அலாவுதீன்நூல் விமர்சகர் ஆசிரிய ஆலோசகர் எஸ்.எல்.மன்சூர்நூலாசிரியர்டாக்டர் நாகூர் ஆரிப் உள்ளிட்ட புத்திஜீவிகள்கவிஞர்கள்எழுத்தாளர்கள்கல்விமான்கள்பாடசாலை அதிபர்கள்ஊடகவியலாளர்கள்,  நண்பர்கள்,  குடும்பத்தினர்  என பலரும்கலந்து கொண்டனர்.
இதன்போது நூலாசிரியர் டாக்டர் நாகூர் ஆரிப் நூலின் முதற் பிரதியினை நிகழ்வின் பிரதம அதிதி கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.சலீமுக்கு வழங்கிவைத்து நூலினை வெளியிட்டு வைத்தார்அதனை தொடர்ந்து நிகழ்வின் அதிதிகளினால் நூலின் பிரதிகள் நிழ்வில் கலந்து கொண்டோருக்கு  வழங்கி வைக்கப்பட்டன.


நூல் பற்றி நோக்கினையும் விமர்சனத்தையும் தென்கிழக்கு பல்கலைக்கழக  தமிழ் மொழித்துறை தலைவர் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாகல்முனை பிராந்திய மின்பொறியியலாளர் எந்திரி எம்.ஆர்.எம்.பர்ஹான்கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் .எல்.அலாவுதீன்நூல் விமர்சகர் ஆசிரிய ஆலோசகர்எஸ்.எல்.மன்சூர் ஆகியோர் நிகழ்த்தினர்.  




Post a Comment

0 Comments