பிரித்தானிய இஸ்லாமிய பாடசாலை நடாத்தும் குர்ஆன் சம்பியன் விருது


Image result for பிரித்தானிய இஸ்லாமிய பாடசாலை நடாத்தும் குர்ஆன் சம்பியன் விருது

பிரித்தானிய இஸ்லாமிய பாடசாலை நடாத்தும் குர்ஆன் சம்பியன் விருது வழங்கும் போட்டி நிகழ்ச்சிக்கான விண்ணப்பங்கள் நாடளாவிய ரீதியில் கடந்த ஏப்பிரல் மாதம் 25 ஆம் திகதி முதல் கோரப்பட்டிருந்தது .இப்போட்டி நிகழ்ச்சிக்காக நூற்றுக் கணக்காண விண்ணப்பங்கள் நாட்டின் பல பாகங்களில் இருந்து சமர்ப்பிக்கப்பட்டன . இதனையடுத்து இவ்விண்ணப்பங்கள் தேர்வுக்குள்ளாக்கப்பட்டு மட்டுப்படுத்தப்பட்டு போட்டியாளர்கள் முதலாம் சுற்றுக்கு  தெரிவு செய்யப்பட்டுள்ளனர் .இப் போட்டியாளர்களுக்கான முதலாவது சுற்றுப் போட்டி ஜுன் மாதம் 27 ம் திகதி புதன் கிழமை காலை  8 மணி இலிருந்து கல்முனை பிரித்தானிய இஸ்லாமிய பாடசாலையில் வெகு விமர்சையாக நடைபெற qஏட்பாடுகள் நடைபெறுகின்றன . அமெரிக்க நாட்டைச் சேர்ந்த சர்வேதேச புகழ்பெற்ற இளம் வயதுடைய ஹாபிசா செல்வி  மர்யம் மசூத் இப்போட்டி நிகழ்ச்சிக்கு கௌரவ நடுவராக செயட்படுகிறார் .


இவ்விருது வழங்கும் போட்டியில் பங்குபற்றும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் எமது பாடசாலை சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

சென்ற ஆண்டு கனடாவில் நடைபெற்ற இவ்வாறான சர்வதேச  போட்டியில் ஐக்கிய  ராஜ்ஜியத்தை பிரதி நிதித்துவம் செய்து கலந்து கொண்டு குர்ஆன் மனன இதர மற்றும்  போட்டிகளில் வெற்றி ஈட்டியவரும்  பிரித்தானிய இஸ்லாமிய பாடசாலையின் ஸ்தாபக மாணவருமான6  வயதே உடைய  "மர்யம் ஜெஸீம்" இன் எண்ணத்தில் உருவானதே இப்போட்டி நிகழ்ச்சியும் விருது  வழங்களுமாகும்.
தான் அடைந்த வெற்றி அனுபவத்தை போல் இலங்கையில் உள்ள சிறுவர்களும் பெற இப்பாடசாலை மூலம்  களம்  அமைத்துக் கொடுக்க  வேண்டும்  என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தி யதன் பொருட்டு  அதட்கு வலுசேர்த்து

 கல்வியலாளரும் , தொழில் முனைவருமான  , சாய்ந்த மருதை சேர்ந்த ஜெஸீம் அப்துல் ஹமீட்

சர்வதேச தரத்தில் அங்கீகாரம் பெறும்  இவ் "அல்குர்ஆன் சம்பியன் விருது "  ஏட்பாடு செய்துள்ளார் .

இன்ஷா அல்லாஹ் ,வருடா வருடம் சர்வேதேச  ரீதியில் நடைபெற ஒழுங்குகள் செய்யபோட்டுள்ளன .

.

3  வயது தொடக்கம்  14  வயதை உடைய பிள்ளைகள் கலந்து  கொள்ளும் நிகழ்ச்சியில் 100 பேருக்கான அனுமதிகளே வழக்கப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments