கல்முனை மாநகரில் பூமான் நபியின் புகழ்பாடும் புனித புர்தா மஜ்லிஸ் நிகழ்வு.


(நிப்ராஸ் மன்சூர்)
கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீப் திறந்த வெளியில் மிக விமர்சையாக  அண்மையில் நடைபெற்ற பூமான் நபியின் புகழ்பாடும் புனித புர்தா மஜ்லிஸ் நிகழ்வினை அம்பாறை மாவட்ட கெளஸிய்யாஹ் உலமாஉகள் அமைப்பினர் ஏட்பாடு செய்திருந்தனர். மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்ற இந்நிகழ்வில் கண்ணியத்திற்குரிய ஸாதாத்துமார்கள், உள்ளூர், வெளியூர், உலமாஉகள், புத்திஜீவிகள், பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என கலந்து சிறப்பித்தனர். 

மேலும் தெஹிவளை அல் ஜாமிஅதுல் கெளஸிய்யஹ் அரபுக் கலாபீடம் அதி சங்கைக்குரிய அஸ்ஸெய்யித் அப்துர் ரஷீத் கோயாத் தங்கள் அவர்களினால் ஸ்தாபிக்கப்பட்டு தற்போது வழிநடத்திக்கொண்டிருக்கும் அதி சங்கைக்குரிய  அஸ்ஸெய்யித் ஹஸன் கோயாத் தங்கள் மற்றும் அதி சங்கைக்குரிய அஸ்ஸெய்யித் ஹுஸைன் கோயாத் தங்கள் அவர்களின் அர்ப்பணிப்பும் இங்கு நினைவு கூற வேண்டிய ஒன்றாகும்.



Post a Comment

0 Comments