(அஷ்ரப் ஏ சமத்)
சாய்ந்தமருது உள்ளூராட்சி சபைக்கான கொழும்பு ஒன்றியம் அங்குரார்ப்பணம் (27) தெஹிவளையில் பொறியியலாளா் நசீரின் கம்பனியில் ஒன்று கூடினார்கள். இச் சந்திப்பில் சுயேச்சை மூலம் சாய்ந்தமருது மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட மாநகர சபை உறுப்பினர்களான றிஸ்மிர், ஜவ்பா் , அசீம், அசீஸ், ரபீக், பஸ்மிர் உட்பட கொழும்பு வாழ் அரச உத்தியோகத்தா்கள், பொறியியலளர்கள், சட்டத்தரணிகள், கணக்காளா்கள், இலங்கை நிருவா சேவை அதிகாரிகள், ஊடகவியலாளா்கள் தனியார் கம்பனி முகாமைத்துவ பணிப்பாளா்கள் ,வா்த்தகா்கள் என பலரும் ஒன்று கூடி சாய்ந்தமருதின் அபிவிருத்தி மற்றும் நான்கு தசாப்தகால கோரி்க்கையான சாய்ந்தமருதுருக்கான தனியான உள்ளுராட்சி சபையை எவ்வாறு வென்றெடுப்பது பற்றியும் கலந்துரையாடினார்கள். இவ் அமைப்பு தொடா்ந்தும் மாத மாதம் ஒன்று கூடி அதன் முன்னெடுப்புகள் அளுத்தங்களை கொழும்பில் பிரயோகிப்பதற்கும் கலந்துரையாடப்பட்டது.
0 Comments