சாளம்பைக்கேணி-04 பிரண்ஸ் விளையாட்டுக் கழகத்தின் கிறிக்கெட் சுற்றுப்போட்டி

(என்.சஜாத், எம்.எம்.ஜபீர்)
சாளம்பைக்கேணி-04 பிரண்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 10ஆவது ஆண்டு நிறைவை முன்னிடடு ஏற்பாடு செய்த மென்பந்து கிறிக்கெட் சுற்றுப்போட்டியில் 15ஆம் கிராமம் சென்றல் விளையாட்டுக்கழகம் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.
\
இச்சுற்றுப்போட்டி 6ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட  அணிக்கு 9வீரர்கள் கொண்ட இறுதிச்சுற்றுக்கு மாவடிப்பள்ளி லைட்டிங் விளையாட்டுக்கழகமும், 15ஆம் கிராமம் சென்றல் விளையாட்டுக்கழகமும் தெரிவானது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மாவடிப்பள்ளி லைட்டிங் விளையாட்டுக்கழகம் களத்தடுப்பை தெரிவுசெய்தது. முதலில் துடுப்படுத்தாடிய 15ஆம் கிராமம் சென்றல் விளையாட்டுக்கழகம் 6ஓவர் நிறைவில் 4விக்கட்களை இழந்து 68 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மாவடிப்பள்ளி லைட்டிங் விளையாட்டுக்கழகம் சகல ஓவர்கள் நிறைவில் 3விக்கட்களை இழந்து 67 ஒட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

இச்சுற்றுப்போட்டி பிரண்ஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஏ.ஏ.இஷாக் தலைமையில் நேற்று 5ஆம் கிராமம் அமீர் அலி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுற்றுப்போட்டிக்கு பிரதம அதிதியாக 12ஆம் கிராம மஸ்ஜிதுல் ஹைரியா பள்ளிவாசலின் கலை கலாச்சார பொறுப்பாகவுள்ள ஏ.பீ.மன்சூர், கௌரவ அதிதியாக 5ம் கிராம சபூரி ஜூம்ஆ பள்ளிவாசல் முன்னாள் தலைவர் ஏ.வீ.சுபைத்தீன், சிறப்பு அதிதிகளாக பிரண்ஸ் விளையாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவர் ஆர்.நிஜாம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது வெற்றி பெற்ற அணிக்கும், இரண்டாம் இடத்தைப் பெற்ற அணிக்கும் கலந்துகொண்ட அதிதிகளினால்  வெற்றி கிண்ணத்தையும் பணப்பரிசல்களையும் வழங்கி கௌரவித்தனர்.
 





Post a Comment

0 Comments