• தப்ரபேன் ஹோல்டின்ஸ் நிறுவனம் - அம்பியன் கெப்பிட்டல் பிஎல்சி ஆகவும், லங்கா செஞ்சுரி இன்வெஸ்ட்மன்ட் நிறுவனம் - அம்பியன் ஹோல்டின்ஸ் பிஎல்சி ஆகவும் மீளமைக்கப்படுகிறது.
• குழுமம் - புதிய வியூகத்துடன் மீளமைக்கப்பட்டு, எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் சகல வர்த்தகத் துறைகளிலும் வெற்றிகரமாக செயற்பட புத்துயிர் பெற்றுள்ளது.
குழுமத்தின் வர்த்தகத் தொலைநோக்கையும், பரிணாமத்தையும், தொழில்நுட்ப வளர்ச்சியையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், உபாயகரமான செயற்பாடு ஒன்றை முன்னெடுத்து, எதிர்கால வர்த்தக உலகிற்கு உகந்த வகையில் தப்ரபேன் குழுமம் முழு மாற்றத்தை 'அம்பியன்' என்ற தனது பெயர் மாற்றத்துடன் மேற்கொண்டுள்ளது. இதற்கமைய, தப்ரபேன் ஹோல்டின்ஸ் பிஎல்சி நிறுவனம் - அம்பியன் கெப்பிட்டல் பிஎல்சி ஆகவும், லங்கா செஞ்சுரி இன்வெஸ்ட்மன்ட் பிஎல்சி - அம்பியன் ஹோல்டின்ஸ் பிஎல்சி ஆகவும் உடனடியாக மாற்றம் பெறுகின்றன. அம்பியன் குழுமத்தின் இந்த மாற்றத்தின் காரணமாக, பல்வேறுபட்ட சகல வர்த்தக நடவடிக்கைகளையும் ஒரே நோக்கத்தின் கீழ் கொண்டு வந்து, முதலீடுகளை சிறந்த முறையில் பராமரித்து, பங்குதாரர்களின் பெறுமதியை அதிகரித்து, நீண்டகாலப் பெறுமதியை தொடர்ச்சியாகப் பெற்றுக் கொடுப்பதற்காக சிறந்த வாய்ப்புக்களை அடையாளம் கண்டு அவற்றுக்குள் பிரவேசிக்க முழுமையாகத் தயார் நிலையில் உள்ளது.
3,500 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டுள்ள அம்பியன் குழுமமானது, நிதித்துறை, உற்பத்தி, சொத்து விற்பனை, தொழில்நுட்பம் மற்றும் உபாயகர முதலீடு என்பனவற்றில் சந்தையில் முன்னணி வகிக்கும் ஒரு நிறுவனமாகும். குழும மீளமைப்பின் மூலம், அம்பியன் கெப்பிட்டல் பிஎல்சி நிறுவனம் - ஹோல்டின்ஸ் கம்பனியாகவும், அதன் சகல வர்த்தக நடவடிக்கைகளும் அம்பியன் ஹோல்டின்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் கீழ் சட்டபூர்வமாக இயங்கும் வகையில் குழுமமாக ஒருங்கிணைக்கப்பட்டு, நடுத்தர அளவிலான பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒரு குழுமம் என்ற ரீதியில் சர்வதேச சந்தையில் உள்ள வர்த்தக வாய்ப்புக்களை அடையாளம் காணத் தயாராக உள்ளது.
இந்த விடயம் பற்றிக் கருத்து வெளியிட்ட அம்பியன் கெப்பிட்டல் பிஎல்சி நிறுவனத்தின் தலைவர் திரு.சஞ்ஜீவ் கார்டினர், 'அம்பியன் நிறுவனத்தின் ஆரம்பம் பற்றிய இன்றைய அறிவித்;தல் மற்றும் குழுமத்தின் பரிணாமம், எமது வெற்றிக்கான அடித்தளத்தை மீளமைப்பதில் ஒரு முக்கிய மைல் கல்லாக அமைந்திருக்கிறது' என்று கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், 'அம்பியன் குழுமமானது, நாட்டின் மிகப் பெரிய வர்த்தக நிறுவனங்களுடன் போட்டியிட தற்போது தயாராக உள்ளது. பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ள ஒரு குழும நிறுவனம் என்ற வகையில், அம்பியன், சிறந்த வர்த்தக வாய்ப்புக்களை அடையாளம் கண்டு, அவற்றை இலங்கையிலும் சர்வதேச தரத்திலும் மிகச்சிறந்த இடத்திற்கு இட்டுச் செல்ல உள்ளது. இதுவொரு ஆரம்பம் மாத்திரமே. எமது உண்மையான ஈடுபாடு, எமது பயணத்தில் தொடர்ந்தும் நிலைத்திருக்கும். முழுமையான சொத்து மற்றும் பெறுமதி சேர்ப்பு என்பனவற்றின் மூலம் எமது பங்குதாரர்கள் மற்றும் ஆர்வமுள்ளோர் எதிர்பார்ப்பதையும் விட அதிக வெற்றியை நாம் அடைந்து கொள்வோம்' என்றும் கூறினார்.
புதிய குழும அமைப்பின் மூலம் அம்பியன் ஹோல்டின்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் இணை நிறுவனங்களாக தப்ரபேன் கெப்பிட்டல் பிளஸ் பிறைவேட் லிமிட்டெட் (இலங்கையின் மூலதனச் சந்தை பற்றிய அதிகூடிய அனுபவத்தைக் கொண்ட முன்னணி நிதிச்சேவை வழங்குனர்), சவுத் ஏஷியா டெக்ஸ்டைல்ஸ் இன்டஸ்ரீஸ் லங்கா பிரைவேட் லிமிட்டெட் (ஏற்றுமதி தரத்திலான நெசவு செய்யப்பட்ட ஆடைகளை உற்பத்தி செய்யும் நெசவு, நிறமூட்டல், தைத்தல், அச்சிடுதல், தூரிகையினால் பூசுதல், பதப்படுத்தல், யவெi-pin அiஉசழஃpழடயச கடநநஉந கயடிசiஉ ஆகிய துறைகளில் அனுபவம் வாய்ந்த முன்னணி சர்வதேச வர்த்;தகப் பெயர்களான விக்டோரியா சீக்கிரட், நெக்ஸ்ட், மார்க்ஸ் அன்ட் ஸ்பென்சர், டெஸ்கோ, கெல்வின் கிளீன், டிக்கத்லன்ட் மற்றும் அடிடாஸ் ஆகியவற்றுக்கான தயாரிப்பு நிறுவனம், தங்கொட்டுவ போசிலேன் பிஎல்சி மற்றும் றோயல் பேன்வூட் போசிலேன் லிமிட்டெட் (போசிலேன் உற்பத்திகள் மற்றும் பரிசுப் பொருட்கள் தயாரிப்பதில் சர்வதேச ஜாம்பவானான ஒனீடா, மேசீஸ், கன்றி றோட், லெனொக்ஸ், ஜோன் லெவிஸ், கிராட்டே அன்ட் பெரல், மெக்ரோஸ், ஜசன்மால், ரல்ப் லோறன்ட், வோல்ட் டிஸ்னி கம்பனி மற்றும் டில்மா ஆகிய நிறுவனங்களுக்கு உற்பத்திகளைப் பெற்றுக்கொடுக்கிறது), சிலோன் லெதர் புரடக்ட்ஸ் பிஎல்சி (பிரசித்தி பெற்ற னுஐ பாதணிகள் மற்றும் ஏனைய லெதர் உற்பத்திகளைத் தயாரிக்கும் நிறுவனம்), மிலேனியம் இன்போமேஷன் டெக்னோலஜீஸ் பிரைவெட் லிமிட்டெட் (இலங்கையின் முன்னணி துறைகளுக்கு அதாவது, வங்கிகள் மற்றும் நிதித்துறை, தொலைத்தொடர்பு, ஆடை உற்பத்தி மற்றும் ஏனைய முன்னணி நிறுவனங்களுக்கு தகவல் தொழில்நுட்பத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் நிறுவனம்) மற்றும் கொழும்பு சிற்றி ஹோல்டின்ஸ் பிஎல்சி (சொத்துக்கள் விற்பனை) ஆகியன செயற்படவிருக்கின்றன.
இந்தப் பரிமாற்றம் பற்றிக் கருத்து வெளியிட்ட அம்பியன் கெப்பிட்டல் பிஎல்சி மற்றும் அம்பியன் ஹோல்டின்ஸ் பிஎல்சி யின் குழும முகாமைத்துவப் பணிப்பாளர் ஃ பிரதம நிறைவேற்று அதிகாரி, 'மிகவும் பெருமையுடன் நான் அம்பியன் நிறுவனத்தின் ஆரம்பத்தை அறிவிப்புச் செய்கின்றேன். இதுவொரு சிறந்த முறையில் செயற்படக்கூடிய பல்வேறு சந்தை முதலிடங்களைக் கொண்ட நிறுவனங்களை உள்ளடக்கிய அளவற்ற வாய்ப்புக்களைக் கொண்ட நிதி சக்தியுடன் கூடிய தப்ரபேன் ஹோல்டின்ஸ் பிஎல்சி மற்றும் லங்கா செஞ்சுரி இன்வென்ஸ்ட்மன் பிஎல்சி யின் பின்னணியில் இயங்கி வரும் ஒரு நிறுவனமாகும். குழுமம் மீளமைக்கப்பட்டு புதிய தொலைநோக்கு, எதிர்பார்ப்பு மற்றும் செயற்பாடுகளுடன் உற்பத்திகளை விருத்தியடையச் செய்து, சர்வதேச பிரசித்தி பெற்ற உள்நாட்டு வர்த்தகப் பெயர்களை உள்ளடக்கி மிகச்சிறந்த தொழில்நுட்பம் மற்றும் நவீன வசதிகளைப் பயன்படுத்தி அனைத்து வளங்களையும் முறையாக ஒருங்கிணைத்து 'அம்பியன்' என்ற பெயரை சர்வதேச அரங்கில் பதித்திட செயற்படும்' என்று கூறினார்.
'அம்பியன் குழுமமானது, சிறந்த பெறுமதிகளை ஒன்றிணைத்து, மிகச்சிறந்த திறமைகளையும், வாய்ப்புக்களையும் ஒரே இடத்திற்கு இட்டுச் செல்லும், சிறந்த கட்டுப்பாடுகளுடன் எமது மக்களை சக்திமிக்கவர்களாக மாற்றும் குழும செயற்பாடுகளைக் கொண்ட வலுவானதொரு கலாசாரத்துடன் பெறுபேறுகளை அடைந்துகொள்ளும், எல்லைகளைத் தாண்டிச் சென்ற, புதிய கரைகளை அடையக்கூடிய ஒரு குழுவாக காணப்படுகின்றது. நேர்மை, ஆளுமை, இடர் மற்றும் கட்டுப்பாடு என்பன எமது கலங்களில் காணப்படுபவை. குழுமம் மற்றும் முழுதாக வெளிப்படையாகவும், நியாயமாகவும் செயற்பட்டு, எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த நன்மைகளைப் பெற்றுக்கொடுத்து, நீண்டகால பெறுமதியை எமது பங்குதாரர்களுக்கும் ஆர்வம் காட்டுவோருக்கும் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் செயற்படுகின்றது. வர்த்தக ரீதியில் அனைத்து அம்சங்களையும் கொண்டு நாம் எதிர்காலத்தை சந்திக்கத் தயார் நிலையில் இப்போது இருக்கின்றோம்' என்று திரு. பிரகாஷ் கூறினார்.
அம்பியன் குழுமமானது, பல்வேறு குழும நிறுவனங்களின் பங்களிப்புடன் மிகவும் சக்தி மிக்கதாகக் காணப்படுகின்றது. கோல்பேஸ் ஹொட்டேல் குழுமம், ஹைட்ராமணி குழுமம் மற்றும் நவிட்டாஸ் ஹோல்டின்ஸ் ஆகியன அவற்றில் சிலவாகும். இந்தக் குழுமமானது நாட்டின் முன்னணி பிரதம நிறைவேற்று அதிகாரியொருவரான பிரசித்திபெற்ற திரு. முரளி பிரகாஷ் அவர்களால் முகாமைத்துவப்படுத்தப்படுவதோடு, குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் அவர் செயற்பட்டு வருகின்றார்.
அம்பியன் கெப்பிட்டல் பிஎல்சி நிறுவனத்தின் பணிப்பாளர் சபையில் மிக முக்கிய அங்கத்தவர்கள் உள்ளனர். சஞ்ஜீவ் கார்டினர், (தலைவர் ஃ சுயாதீனமற்ற நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்), அஜித் தேவசுரேந்திர (பிரதித் தலைவர் ஃ நிறைவேற்று அதிகாரமற்ற சுயாதீனமற்ற பணிப்பாளர்), முரளி பிரகாஷ் (குழும முகாமைத்துவ பணிப்பாளர் ஃ பிரதம நிறைவேற்று அதிகாரி), பிரியந்த பெர்னாண்டோ (சுதந்திரமான நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்), ஹர்ஷ அமரசேகர பி.சி (சுயாதீனமற்ற நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்), ரணில் பத்திரண (சுயாதீனமற்ற நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்), சரிந்த உணம்புவ (சுயாதீன நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்), தேசமாண்ய தேவா ரொட்றிகோ (சுயாதீன நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்) ஆகியோர் அவர்களாவர். அம்பியன் ஹோல்டின்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் பணிப்பாளர்களாக ஏ.ஜீ.வீரசிங்க (தலைவர் ஃ சுயாதீனமற்ற நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்), முரளி பிரகாஷ் (குழும முகாமைத்துவ பணிப்பாளர் ஃ பிரதம நிறைவேற்று அதிகாரி), ருவன் சுகததாச (சுயாதீனமற்ற நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்), மங்கள போயகொட (சுயாதீன நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்) மற்றும் பிரியந்த மத்துமகே (நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்).
0 Comments