(எம்.எம்.எஸ்.ஸிஹாப்)
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சினால் வேலையற்ற பட்டதாரிகளை பயிற்சிக்காக இணைத்துக் கொள்ளும் பொருட்டு கோரப்பட்ட விண்ணப்பத்திற்கமைய நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் 148 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தெரிவித்தார்.
இதற்கமைய விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ள விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை 16ஆம் திகதி திங்கட்கிழமையும், 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும் பிரதேச செலகத்தில் நடைபெறவுள்ளதாகவும், இவ்விரு தினங்களிலும் சமுகமளிக்க முடியாதவர்கள் 26ஆம் திகதி வியாழக்கிழமை கலந்து கொள்ள முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நேர்முகப் பரீட்சைக்காக சமுகமளிக்கும் போது தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான அடையாள அட்டை, கல்விச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், ஏனைய மேலதிக தகைமைகளை உறுதி செய்வதற்கான சான்றிதழ்கள் என்பனவற்றையும் அதன் நிழற்பிரதிகளையும் கொண்டு வருமாறும் மேலும் தெரிவித்தார்.

0 Comments