அரசாங்க அதிபரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு, கறுப்பு பட்டியுடன் கடமை

அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் கறுப்பு பட்டியணிந்து இன்று கடமையில் ஈடுபட்டனர்.இம்பாரை மாவட்டத்திலுள்ள பெரும்பாலான பிரதேசங்களில் பணியாற்றும்  அனைத்து இனங்களையும் சேர்ந்த உத்தியோகத்தர்கள் தமது கடமையின் போது கறுப்பு பட்டியணிந்தவாறு கடமையில் ஈடுபட்டதை அவதானிக்கக் கூடியதாகவிருந்தது.இப்போராட்டத்திற்கு மாவட்டத்திலுள்ள பல்வேறு அமைப்புக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments