நாவிதன்வெளியில் போசாக்கு கண்காட்சி


(எம்.எம்.எஸ்.ஸிஹாப்)
நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தேசிய போசாக்கு மாதத்தை முன்னிட்டு உலக தரிசன நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த போசாக்கு உணவு கண்காட்சியும், தொற்றா நோய் பரிசோதனையும் நேற்று இடம்பெற்றது.
நாவிதன்வெளி பிரதேசத்திலுள்ள பின்தங்கிய நிலையிலுள்ள பொது மக்களுக்கும், பாடசாலை மாணவர்களுக்கும் போசாக்கு மற்றும் தொற்றா நோய்கள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடனேயே இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி ஜே.மதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் .எல்.அலாவுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கண்காட்சியையும், தொற்றா நோய் பரிசோதனையும் ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் டாக்டர் .இஸ்ஸதீன், தாய் சேய் நல பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்..சீ.எம்.பஸால், தொற்றா நோய் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் .எம்.ஹாரீஸ், நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் உலக தரிசன நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் .தனுராஜ், போசாக்கு பிரிவு வளவாளர் என்.லோகிதராஜா உள்ளிட்ட வைத்தியர்கள், தாதியர்கள், அரச உயர் அதிகாரிகள், சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என மேலும் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது தொற்றா நோய்களுக்கான பரிசோதனை, உடற்பயிற்சியின் அவசியம், பற்சுகாதாரம், போசாக்கு உணவின் அவசியம் என்பன தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன், போசாக்கு குறைவாகவுள்ள கர்ப்பிணி தாய்களுக்கு போசாக்கு உணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.







Post a Comment

0 Comments