” RED MAXX (ரெட் மெக்ஸ்) குழுமம் அங்குராப்பணம்

(எம்.ஐ.எம்.அஸ்கர்,எம்.எம்.ஜபீர், எம்.என்.எம்.அப்ராஸ்)

சாய்ந்தமருது ரெட் மெகஸ் ( RED MAXX ) அமைப்பின் சமூகசேவை அமைப்பு , விளையாட்டு கழகம் , கிறிக்கட் அணிக்கான சீருடை அறிமுகம் , கல்வி அபிவிருத்தி நிறுவனம் ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய ' நமக்கான பாதையை நாமே உருவாக்குவோம் ' எனும் தொனிப்பொருளில் அமைந்த அங்குரார்ப்பண நிகழ்வு  சாய்ந்தமருது ஸீ பிரீஸ் ரெஸட்ரோரண்டில் ரெட் மெக்ஸ் அமைப்பின் தலைவர் ஏ.எம்.ஏ.நிஸார் ( பிரதி அதிபர் , லீடர் எம்.எச்.எம்.அஸ்றப் ) தலைமையில் ஸ்தாபக அமைப்பாளர் ஏ.என்.எம்.ஜலுாத் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்றது.

இந;நிகழ்விற்கு அபிவிருத்தி உபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சின் மேலதிக செயலாளர் அல்ஹாஜ் ஏ.எல்.எம். சலீம் பிரதம அதிதியாகவும்,வசந்தம் தொலைக்காட்சியின் சிரேஸ்ட நிகழ்ச்சி தயாரிப்பாளர் எம்.எஸ்.எம்.முஸர்ரப், ஸ்ரீலங்கா கிறிக்கட் அணி வீரர் எம்.என்.எம்.டில்சாத் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் பொறியியலாளர் எம்.ஐ.றியாஸ், வியுகம் முகநூல் தொலைக்காட்சி பணிப்பாளர் எஸ்.ஜனூஸ் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது அதிதிகள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் சமூகசேவை அமைப்பு இ விளையாட்டு கழகம், கிறிக்கட் அணிக்கான சீருடை அறிமுகம் இ கல்வி அபிவிருத்தி நிறுவனம் ஆகியவற்றிற்கான சின்னங்களும் அறிமுகம் செய்யப்பட்டன.








Post a Comment

0 Comments