கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கான முன்மொழிவுகள்


Image may contain: 2 people, including Mohamed Jaufer, people smiling, suit and indoor

சுற்றுலாத்துறை மற்றும் கைத்தொழில் மன்றம் (Chamber of Tourism and Industry)  , நாட்டின் சுற்றுலாத்துறை அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்படும் உங்கள் முயற்சிகளின் ஓர் அங்கமாக  பின்வரும்; முன்மொழிவுகளை தங்களின் கவனத்திற்கும் அவற்றை நடைமுறைப் படுத்துவதற்கும் சமர்ப்பிக்கின்றது.


1. கடற்கரைகளை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் அவ்வப்போது ஒழுங்கு செய்யப்பட்டிருந்த போதிலும், அருகம்பை, பாசிக்குடா, நிலாவெளி போன்ற இடங்களிலுள்ள கரையோரங்கள் அவைகள் பாவனையாளர்களின் வசதிக்கேற்ற ஒரு இடமாக மாற்றியமைப்பதற்காக அதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒரு விடயமாகும். ஆகவே நாங்கள் ஒரு நிரந்தரமான கரையோர சுத்தம் செய்தல் எனும் நிகழ்ச்சித் திட்டத்தை இந்த இடங்களில் அமுலாக்கம் செய்யப்பரிந்துரைக்கிறோம். உள்ளுர் நிர்வாகங்களிடம் இதற்காண தொழிலாளர் பற்றாக்குறை நிலவுவதனால் அந்நிருவாகங்களுக்கு கரையோரங்கள் சுத்தம் செய்வதற்கான இயந்திரங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் நாங்கள் பரிந்துரை செய்கிறோம்.


2. இப்பகுதிகளில் நடாத்தப்படும் சில ஹோட்டல்கள் மற்றும் விருந்தினர் விடுதிகள் இதுவரை சுற்றுலா அதிகாரசபையின் அனுமதியைப் பெறவில்லை. எனவே இதற்காக ஒரு பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்பது எமது பரிந்துரையாகும். இதன் மூலம் ஹோட்டல்களும், உணவகங்களும் அவசிய செயற்பாட்டு உத்தரவுப் பத்திரங்களை பெற்றுக் கொள்ள ஏதுவாகும். வெளிநாட்டு இனத்தவர்கள் தேவையான அரசாங்க அனுமதியின்றி உள்நாட்டவருடன் கூட்டாகச் சேர்ந்து ஹோட்டல்கள் மற்றும் விருந்தினர் விடுதிகள் நடாத்திச் செல்வது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.


3. அருகம்பை நீர் சறுக்கல் துறை உலகலாவிய ரீதியில் பிரசித்தி பெற்றிருந்த போதும் அஙகு செல்வதற்கான பாதை சரியானதாக இல்லை. எனவே அங்கு செல்வதற்கான பாதை சரியான முறையில் நிர்மாணிக்கப்பட வேண்டும்.

4. உள்ளுர் அதிகார சபைகளுக்குரிய தொழிலாளர்கள் நாளாந்த தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமாக இல்லாததால். அவ்வாறான உள்ளுர் அதிகார சபைகளுக்குத் தேவையான தொழிலாளர் நியமனம் செய்யப்பட வேண்டும்.
5. பாசிக்குடா மற்றும் நிலாவெளி என்பன சுற்றுலாப் பிரதேசங்களாக பிரகடனப்படுத்தப்பட்டவையாகும் அதேபோல் சங்கமம் கந்த தொடக்கம் ஊரணி வரையிலும் மற்றும் பானம தொடக்கம் ஓகந்த வரையிலான பகுதிகள் சுற்றுலாப் பிரதேசங்களாக நியமிக்கப்படுவது அவசியமாகும்.

6.  அவசர அம்புலன்ஸ் சேவை '1990' கிழக்கிலுள்ள சுற்றுலாத்தறைப் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்படல் வேண்டும்.

7. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மத ஸ்தலங்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு அத்தியாவசிய தேவைகளைக் பூர்த்திசெய்யகூடியதாய் இருத்தல் வேண்டும்.

8. சுற்றுலாத்துறைக்கான வளங்களைக் கொண்ட புதிய பகுதிகளை ஆராய்ந்து, அடையாளம் கண்டு அவைகளை அபிவிருத்தி செய்தல், உதாரணமாக வாகரை, கஞ்சிகுடிச்சாறு, கொக்கட்டிச்சோலை, மற்றும் தொப்பிக்கல மலைப்புரம் போன்ற சுற்றுலா வளம் கொண்ட பகுதிகளை அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும்.


9. ஹோட்டல் ஊழியர்களுக்கும், முச்சக்கரவண்டி (டுக் டுக்) ஓட்டுநர்களுக்கும், பூங்காக்கள் காவலர்களுக்கும் அறிவூட்டல் நிகழ்ச்சிகளை நடாத்த முடியுமானதோடு சுற்றுலா வழிகாட்டிகளையும், சவாரி ஜீப்வண்டி ஓட்டுனர்களையும் பயிற்சியளிக்கும் நிகழ்வுகள் இடம்பெறவேண்டும்.


10. அருகம்பை, பாசிக்குடா, நிலாவெளி போன்ற மூன்று பிரதேசங்களிலும் தற்போதுள்ள பொலிஸ் காவலரண்களை  சுற்றுலா பொலிஸ் நிலையங்களாக தரமுயர்த்தி, அவற்றில் கடமைபுரியம் பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் ஓழுங்குகளைச் செய்ய வேண்டும்.


11. ஹெலிடுவர்ஸ் யாழ்ப்பாணத்திற்கும் திருகோணமலைக்குமான தனது தினசரிப் பயணத்தை நிறுத்தியுள்ளது. இது மீண்டும் தனது தினசரி பயணத்தை அம்பாரை,  மட்டக்களப்பையும் உள்ளடக்கியதாக ஆரம்பிக்கப்படல் வேண்டும்.


12. உயிர்க்காப்பாளர்கள் அனைவருக்கும் மேலதிக வசதிகள் செய்து கொடுக்கப்படல் வேண்டும்.


13. அருகம்பை தெரு விளக்குகளை சூரிய சக்தியில் இயங்கும் விளக்குகளாக மாற்றம் செய்ய வேண்டும்.


14. அருகம்பை, பாசிக்குடா, நிலாவெளி மூன்று பிரதேசங்களிலும் சுற்றுலாத்துறை தகவல் நிலையங்கள் திறக்கப்படல் வேண்டும்.


15. அம்பாரை மற்றும் மொணராகலை பிரதேசத்திலுள்ள இளைஞர் யுவதிகளை பயிற்றுவிக்க அருகம்பையில் ஹோட்டல் பாடசாலை திறக்கப்படல் வேண்டும்


16. இப்பிரதேசத்திலுள்ள உப்புநீர் ஏரிகள் (லகூன்கள்), அருகம்பை, மட்டக்களப்பு வாவிகள் உட்பட சுற்றுலாத்துறைக்காக பயன்படுத்தப்படல் வேண்டும். எனவே இந்த வளங்கள் (உப்புநீர் ஏரிகள் (லகூன்கள்), வாவிகள்) சுற்றுலாப் பயணிகளுக்காக அபிவிருத்தி செய்யபட வேண்டுமென பரிந்துரை செய்யப்படுகின்றது.


17. அருகம்பைப் பிரதேசம் உலகப்புகழ் பெற்ற ஓர் நீர்ச்சறுக்கல் இடமாக இருந்த போதிலும் அங்கு ஒரு நட்சத்திர அந்தஸ்த்துள்ள ஹோட்டல் ஒன்று இல்லை. எனவே இந்நோக்கத்திற்காக முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் ஒரு திட்டம் மேற்கொள்ளப்படல் வேண்டும்.


18. கிழக்குப் பிரதேசத்திற்கு மத்திய கிழக்கு. சீனா மற்றும் இந்திய சுற்றுலாப் பயணிகள் வருகை மிகக்குறைவு, எனவே அவர்களைக் கவர்ந்திழுக்கும் ஒரு விஷேட விளம்பரப் பிரச்சாரம் மேற்கொள்வது காலத்தின் தேவையாகும்.


19. இப்பிரதேசத்திலிருந்து போதைப் பொருளை ஒழிப்பதற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்நோக்கத்திற்காக சிறப்பு பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் இப்பிரதேசங்களில் கடமையிலீடுபடுத்தப்படல் வேண்டும்.


20. கடற்கரையிலிருந்து 20 மீட்டர் தூரத்திற்குள் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள விருந்தினர் விடுதிகளும் உணவகங்களும் கடற்கரைக்கு விசாலாமான ஓர் இடத்தை ஒதுக்கி அவைகளை வேறு இடங்களுக்கு மாற்றம் செய்ய வேண்டும். அத்தோடு அவர்களுக்கு நஷ்டஈடு வழங்கும் திட்டம் அமுல் படுத்தப்படல் வேண்டும்.


21. இப்பிரதேசத்திலுள்ள அரசாங்க அதிகாரிகளுக்கு நாட்டிற்கு சுற்றுலாத்துறையின் முக்கியத்துவம் பற்றியும், அங்கு வருகைதருபவர்களுக்கு எவ்வாறு சேவை புரிவது பற்றியும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடாத்தப்படுவது மிக அவசியமாகும்.


22. அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள 'நுவெநசிசளைந ளுசi டுயமெய' (என்டப்ரைஸ் ஸ்ரீலங்கா) நிகழ்ச்சி நிரலை நாம் வரவேற்கும் அதேவேளை சுற்றுலாத்துறைக்கான அபிவிருத்திக் கடனுதவி வழங்கும் அனுமதி முறையை இலகுவாக்கல் மூலம் சுற்றுலாத்துறையை மேம்படச் செய்வதற்கு வங்கி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்படல் வேண்டும்.


23. சுற்றுலாத்துறைப் பிரதேசங்களில்  தொழில்புரியும் மீனவர்கள் சுற்றுலாத்துறையின் முக்கியத்துவம் பற்றி அறிவூட்டப்பட்டு, அவர்களுக்கு உரிய தகவல்கள் கொடுக்கப்படுவதுடன் அருகம்பை மற்றும் பாசிக்குடாவில் சில பிரதேசங்களில் உள்ள மீனவர்கள் மீள்  குடியமர்த்தப்படல் வேண்டும்.


24. சுற்றுலாத்துறை பிரதேசங்கள் அடிக்கடி மின்வெட்டிற்கு இலக்காவதால் இப்பிரதேசங்களின் மின் விநியோகம்  சீர்செய்யப்பட வேண்டும்.


25. அருகம்பை மற்றும் பாசிக்குடா  பிரதேசங்களில் தொடர்ந்து சுத்தமான நீர் விநியோகம் இல்லததால,; நீர் விநியோகத்திட்டம் நிறுவுதல் மூலமோ அல்லது கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைப்பதன் மூலமோ அதற்குத் தீர்வுகாணப்படல் வேண்டும்.


26 'நுஉழ வுழரசளைஅ' (பசுமைச் சுற்றுலாத்துறை) கிழக்கில் உருவாக்கப்படல் வேண்டும்.


27. மூன்றுமாடிகளுக்கு மேல் கட்டிடம் ஒன்று கட்டப்படுவதற்கு தீயணைப்பு இயந்திரங்கள் தம்வசம் இல்லாத நகர அபிவிருத்தி சபைகளுக்கு (ருனுயு) அனுமதி கொடுப்பதில்லை அவ்வாறான சகல உள்ளூர் அதிகாரசபைகளுக்கும் தீயணைப்பு இயந்திரங்கள் வழங்கப்படல் வேண்டும்.


28. இப்பிரதேசங்களில் பழவகைகள் மற்றும் மரக்கறி பயிரிடல் அத்தோடு குடிசைக் கைத்தொழில் போன்றவை அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும்.


29. திருகோணமலை மற்றும் மட்டக்களப்பிற்கு நடாத்தப்படும் ரயில் சேவைகளில் சொகுசு பெட்டிகள் காணப்படுவதில்லை. எனவே அவைகள் அந்த ரயில் சேவைகளில் பொருத்தப்படுவது அவசியமாகும். அத்தோடு மன்னம்பிடடியில் இருந்து மஹஓயா, அம்பாரை மற்றும் பொத்துவில் வரை ரயில் பாதை விஸ்தரிப்புத் திட்டம் அமுல்படுத்தப்படல் வேண்டும்.


30. தற்போது உள்ளூர் விமான சேவைகள் வரியாக 30மூ அறவிடப் படுகின்றது.; கிழக்கிற்கான உள்ளூர் விமான சேவைகள் அத்தனை வரிவிதிப்புக்களும் அங்கு சுற்றுலாத்துறை போக்குவரத்து முன்னேற்றம் காணும் வரை நீக்கப்படல் வேண்டும்.

சுற்றுலாத்துறை மற்றும் கைத்தொழில் மன்றம் (ஊhயஅடிநச ழக வுழரசளைஅ யனெ ஐனெரளவசல) அரசாங்கத்திற்கும் சுற்றுலாத்துறை அமைச்சிற்கும் இந்நாட்டின் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் அவைகளின உண்மையான முயற்சிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது அதற்காக எமது பூரண ஒத்துழைப்பைத் தர கடமைப்பட்டுள்ளோம் என்பதையும் தெரியப்படுத்துகின்றோம்.



A.M.Jaufer

தலைவர்

சுற்றுலாத்துறை மற்றும் கைத்தொழில் அரங்கு 

(Chamber of Tourism and Industry)

Post a Comment

0 Comments