(அன்னையூரான் பிரியன்)
வீரக்குட்டி மற்றும் பொன்னம்பலம் அறக்கட்டளை அமைப்பினரால் அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட புதிய வீட்டுத்திட்டத்தை சேர்ந்த S. கருணாநிதி என்பவர் புற்றுநோயினால் பாதிப்படைந்து அன்றாட கூலி வேலைக்கு போக முடியாத நிலையிலும் தனது மகளும் நடக்க முடியாத நிலையில் இரண்டுகால்களும் பலயீனம் அற்று (நடக்கமுடியாத)நிலையில் உள்ளார்.
வீரக்குட்டி மற்றும் பொன்னம்பலம் அறக்கட்டளை அமைப்பின் உறுப்பினர் ஜெயா பாஸ்கரன் ( டென்மார்க்) அவர்களினால் 2018.09.26 திகதி அன்று அமைப்பின் ஸ்தாபகர் பொன்னம்பலம் சங்கர் அவர்களின் ஆலோசனையின் பெயரில் உதவி பணத்தொகை வழங்கிவைக்கப்பட்டது.
படத்தில் திருமதி பொன்னம்பலம் சின்னத்தங்கம் அவர்களால் உதவித்தொகை வழங்குவதைக்காணலாம்
இவர் தனது மருத்துவ சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு செல்வதற்கு கூட பணமின்றிய நிலையிலே மிகவும் சிரமத்தின் மத்தியில் செல்வதாகவும் அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்
நீங்களும் இவ் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் இக்குடும்பத்தின் நிலையினை கருதில்கொண்டும் புற்றுநோயினால் பாதிப்படைந்த S. கருணாநிதி அவரின் அன்பு மகள் நடக்கமுடியாத நிலையின் வறுமையில் கல்விகற்றுக்கொண்டிருப்பதை கருத்தில்கொண்டும் நீங்களும் நேரடியாக உதவலாம்.
(தொடர்புகளுக்கு.0094762357509)






0 Comments