சென்றல்கேம்ப் சம்பியன் லீக் மென்பந்து கிரிகெட் சுற்றுப்போட்டியில் சென்றல் லயன் அணி சம்பியன்

(எம்.எம்.ஜபீர்)
மத்தியமுகாம் ஓக்ஸ்போட் விளையாட்டுக் கழகத்தின் 18ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்த  சென்றல்கேம்ப்  சம்பியன் லீக் மென்பந்து கிரிகெட் சுற்றுப்போட்டியில் சென்றல் லயன் அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.

மத்தியமுகாம் பிரதேசத்திலுள்ள விளையாட்டுக் கழகங்களை ஒன்றினைத்து அணிக்கு 8பேர் கொண்ட 5ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட கிரிகெட் சுற்றுப்போட்டியின் இறுதிச்சுற்றுக்கு சென்றல் லயன் அணியும், சென்றல் டைக்கர் அணியும் தெரிவானது.

நாணையச் சுழச்சியில் வெற்றிபெற்ற சென்றல் லயன் அணி முதலில் துடுப்படுத்தாடி 5ஒவர் நிறைவில் 1விக்கட்டை இழந்து 92 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்றல் டைக்கர் 5ஒவர் நிறைவில் 03 விக்கெட்டை இழந்து 76 ஒட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

இச்சுற்றுப்போட்டி ஒக்ஸ்போட் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எம்.எஸ்.ஜெஸ்மீர் தலைமையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்தியமுகாம் அமைப்பாளர் எம்.எச்.அலியாரின் அனுசரனையில் மத்தியமுகாம் ஜீ.எம்.எம் பாடசாலை மைதானத்தில்  நடைபெற்ற நிகழ்வுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,  மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதில் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.வீ.நவாஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாவிதன்வெளி அமைப்பாளர் ஏ.சீ.நிஸார்,  மத்தியமுகாம் ஜீ.எம்.எம்.பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.லாபீர்,  விளையாட்டு வீரர்கள், ஒக்ஸ்போட் விளையாட்டு கழகத்தின் முக்கிஸ்தர்கள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.







Post a Comment

0 Comments