சவளக்கடை பொலிஸ் பிரிவின் கீழுள்ள பாடசாலைகளின் பாதுகாப்பு விடயம் தொடர்பாக பாடசாலை அதிபர்களுக்கு தெளிவூட்டும் கலந்துரையாடல் சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி றம்சீன் பக்கீர் தலைமையில் பொலிஸ் நிலையத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.
இதன்போது எதிர்வரும் 6ஆம் திகதி பாடசாலை மீண்டும் ஆரம்பமாகவிருப்பதனால் பாடசாலை வளாகத்தின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், பாதுகாப்புக் குழுவை அமைத்தல், பாதுகாப்பு தொடர்பாக கடைப்பிடிக்க வேண்டியவை, தேவையற்ற வித்தில் மாணவர்கள் வகுப்பறையிலிருந்து வெளியேறுதல், பாடசாலை வளாகத்தில் தேவையற்ற விதத்தில் நடமாடுதல் ஆகியவற்றை தவிர்த்தல், பாடசாலைக்குள் நுழைபவர்களின் அடையாளத்தை உறுதி செய்து கொள்வது பொதிகள், பாடசாலைப் பைகள் மற்றும் ஏனைய பொருட்களை சோதித்துக் கொள்வது உள்ளிட்ட பாடசாலை மாணவர்களின் நலனைக் கவணத்தில் கொண்டு பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு அதிபர்களுக்கு தெளிவூட்டப்பட்டது.




0 Comments