ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்களிடம் சிலோன் மீடியா போரம் கோரிக்கை.

.
நாட்டின் தற்போதைய அசாதாரண சூழ்நிலைமை காரணமாக நாடளாவிய ரீதியில் முப்படைகளின் சுற்றிவலைப்பு சோதனைகள் இடம்பெற்று வருகின்றன. இதற்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.
இச்சுற்றிவலைப்பு சோதனைகளின் போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் பற்றி ஊடகவியலாளர் சேசரித்த செய்திகள் ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்டு வருகின்றன.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்களா? அல்லது விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டு விட்டார்களா? என்ற தொடர் செய்திகள் ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்படுவதில்லை. இதனால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாகவே நாட்டிலுள்ள எல்லாச் சமூகத்தவரும் பார்க்கின்ற நிலைமை இன்று தோன்றியுள்ளது.
அன்பின் ஊடகவியலாளர்களே!, ஊடக நிறுவனங்களே!
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான தொடர் செய்திகளை பொறுப்பு வாய்ந்த பாதுகாப்பு பிரிவினரிடமிருந்து செய்திகளை சேகரித்து கடமையாற்றும் ஊடகங்களுக்கு அனுப்புமாறும் பொறுப்பு வாய்ந்த ஊடக நிறுவனங்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான தொடர் செய்திகளை வெளியிடுமாறும் சிலோன் மீடியா போரம் கோரிக்கை விடுக்கின்றது.
நாட்டின் நிலையான சமாதானம், இன நல்லிணக்கம், செளஜன்ய வாழ்வு, அபிவிருத்தி என்பவற்றிக்கு ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் பங்களிப்பு அளப்பெரியதாகும். அதனை சிலோன் மீடியா போரம் மதிக்கின்றது. வரவேற்கின்றது.

Post a Comment

0 Comments